பக்கம் : 837
 

 

       1மேலா விலங்கு மணிகேட கத்தி
னொருபால் விலங்கி யொருபாற்
     றோலாத வாளி னெறியத் துணிந்து
சுடர்கான்று வீழ்ந்த ததுவே.
     4நவில்வார் நமக்கு மரிதே.
 
     (இ - ள்.) மாலால் எதிர்ந்து மலைவாயை - எம்மாற்றல் அறியாத மயக்கத்தாலே
எம்மொடு எதிர்த்துப் போர்செய்யத் துணிந்த உன்னை, நீடுபொரவைப்பது என்னை -
நீண்டபொழுது போர் செய்யுமாறு விட்டு வைப்பதுதான் எற்றிற்கு, இனி - இப்பொழுதே,
என் வேலால் அழிப்பன் -என்னுடைய வேற்படையாலே உன்னைக் கொல்வேன்காண், என
- என்று கூறி, வேல் எறிந்து - தன் கைவேலைத் தேவசேனன் மிசை எறிந்து, விறல்
வேகன் ஆர்ப்ப - ஆற்றல்மிக்க அழல்வேகன் ஆரவாரஞ்செய்தானாக, மறவோன் -
வீரனாகிய தேவசேனனும், மேலால் இலங்கும் மணி கேடகத்தின் - மேற்பகுதிகளிலே
திகழ்கின்ற மணிகள் அழுத்தப்பட்ட தனது கிடுகினாலே, ஒருபால் விலங்கி - அவ்வேலை
ஒரு பக்கத்தே விலகுமாறு தடுத்து, ஒருபால் - மற்றொரு பக்கத்தேயுள்ள தனது, தோலாத
வாளின் எறிய - தோல்வியறியாத வாளாலே வெட்ட, அது - அவ்வேல், துணிந்து -
துண்டுகளாகி, சுடர்கான்று - தீப்பொறிகளைக் கக்கிக்கொண்டு, வீழ்ந்தது - வீழ்ந்தொழிந்தது,
(எ - று.)

     அழல்வேகன், “அடே தேவசேனா உன்னை நீண்டபொழுது உயிருடன்
விட்டுவைப்பதனாற் பயன் என்னை? இப்பொழுதே கொல்கிறேன் பார்“ என்று வேலை
ஓச்சத் தேவசேனன், அதனைக் கிடுகாற்றடுத்து வாளால் துண்டுகளாக வெட்டி வீழ்த்தினான்,
என்க.
 

( 202 )

 

1133. தேவசேனன் அழல்வேகனுடைய
     ஒரு தோளைத் துணித்தல்
2எய்வே லறுத்து 3வறியானை நோக்கி
     யெறியாது நிற்ப 4வவனோர்
நெய்வேல் பெயர்த்து நிருமித்த5ஃ தேந்தி
     யுருமொத்து 6நேர்ந்து பொருதான்
7வெவ்வே றெருட்டி யொருதோ ணிமிர்த்தி
     விரலொன்று சுட்டி 8வரவே
வைவேலி னோடு நிமிர்கின்ற தோளை
     யறவீசி னானம் மறவோன்.
    
 

     (பாடம்) 1வேலா. 2கைவே. 3வெறியானை. 4வவனும். 5செந்தீ. 6வந்து. 7செவ்வே
றிரட்டி. 8வருவான்.