பக்கம் : 838
 

     (இ - ள்.) எய்வேல் அறுத்து - எய்தவேலை இவ்வாறாகத் துணித்து, வறியானை
நோக்கி - படைக்கலம் இழந்து வறுங்கையொடுநின்ற அழல்வேகனை இரக்கத்தோடே
பார்த்து, எறியாது நிற்ப - தேவசேனன் அவன்மீது படைஒன்றும் வீசாதவனாய் நிற்க,
அவன் - அவ்வழல்வேகன், ஓர் நெய்வேல் - ஒரு நெய் பூசப்பட்ட வேற்படையை,
பெயர்த்து நிருமித்து - மீளவும் படைத்துக்கொண்டு, அஃதேந்தி - அப்புதிய வேலைக்
கையிலே பற்றி, உருமொத்து - இடியேற்றைப் போன்று, நேர்ந்து பொருவான் -
தேவசேனனோடு எதிர்த்துப் போர் செய்யும் பொருட்டு, வெவ்வேல் தெருட்டி -
அவ்வெவ்விய வேலைத் திருந்தக்கொண்டு, ஒரு தோள் நிமிர்த்தி - ஒரு கையை
உயர்த்தியவனாய், விரல் ஒன்று சுட்டி - ஒரு விரலாலே இலக்காகிய தேவசேனனைச்
சுட்டிக் காட்டியவனாய், வரவே - அணுகிவர, அம்மறவோன் - அந்த வீரனாகிய
தேவசேனன், வைவேலினோடும் - அவனுடைய கூரிய வேற்படையோடே, நிமிர்கின்ற
தோளை - உயர்த்திய கையை, அற வீசினான் - அற்று வீழும்படி தன் வாளாலே
வெட்டினான், (எ - று.)

படையிழந்து நிற்பார் மேல் படைவிடுதல் மறவர்க்கு அறமன்றாகலின், தேவசேனன், வறிதே
எதிர்நின்ற அழல்வேகன்மேற் படை தொடாது நின்றான். அப்பொழுது அழல்வேகன் வேறு
ஒருவேலால் தேவசேனனை எறிய வரவே அவ் வேலுடன் அவன் றோளையும் துணித்தான்,
என்க.
 

( 203 )

தேவசேனன் அழல்வேகனுக்கிரங்கி அவனைப்
போக எனலும் அவன் மறுத்தமையால் கொல்லுதலும்

1334. நெய்யுற்ற வேலு மொருதோளும் வீழ
     வொருதோளி 1னீடு செருவைச்
செய்யுற்ற போழ்தி னெதிரே விலங்கி
     யிதுதேவ சேனன் மொழியும்
கையுற்ற 2தொன்று கவலே லுனக்கி
     3துறுமாறு போக வெனவும்
மையுற்ற காளை வருவானை வாளி
     னுயிர்வவ்வி னானம் மறவோன்.
 
     (இ - ள்.) நெய்உற்ற வேலும் ஒரு தோளும்வீழ - நெய் பூசப்பட்ட அப்புதிய வேலும்
அதைப்பற்றிய ஒரு கையும் அற்று வீழ்ந்த பின்னரும், ஒருதோளின் நீடு செருவை -
எஞ்சிய தன் ஒரு தோளாலே நெடிய போர்த்தொழிலை, செய்யுற்ற போழ்தின் - அவ்வழல்
வேகன் செய்யத் தொடங்கிய பொழுது, எதிரே விலங்கி - அவன் எதிரே சென்று
அவனைத்
 


     (பாடம்) 1னோடு. 2தென்று. 3துறுமேறு.