பக்கம் : 840 | | சடிமன்னன் மைத்துனனாகிய தேவசேனனால் அழல்வேகன் கொல்லப்பட்டவுடனே சுவணகேது என்னும் ஒருவீரன் போர்க்களத்தே வந்து தோன்றினான் என்க. | ( 205 ) | சுவணகேது சூண்மொழிதல் | 1336. | அஃதே யஃதே யங்கார வேக னாங்கோ ரயில்வாளால் வெய்தாங் குற்று 1வீடினனா னன்றே நன்றே மறுமாற்றம் மைதோய் மலையு மண்ணகமு நமதாச் செய்வன் செய்யேனேற் செய்தா 2ரமர ருலகாள்வ னிரண்டி லொன்று திண்ணமிதே. | (இ - ள்.) அஃதே அஃதே - அப்படியோ! அப்படியோ!, அங்காரவேகன் - அழல்வேகன் என்பான், ஆங்கு ஓர் அயில் வாளால் - அவ்விடத்தே ஒருகூரிய வாளாலே, வெய்து ஆங்கு உற்று - இன்னலுற்று, வீடினன்ஆல் - இறந்தான் கொல், நன்றே நன்றே மறுமாற்றம் - தூதர்களே உங்கள் மறுமொழி அழகிது! அழகிது! ஆயின் : மைதோய் மலையும் மண்ணகமும் - சடியின் முகில்தோய் மலைநாட்டையும் பயாபதியின் சுரமை நாட்டையும், நமதாச் செய்வன் - இன்றே நம்முடையனவாகச் செய்வேன், செய்யேனேல் - அவ்வாறு செய்யேன் ஆய்விடில், செய்தார் அமரர் உலகு ஆள்வன் - வெற்றி செய்தற்கறிகுறியாகிய மாலையணிந்த வீரத்தேவரின் துறக்கத்தை ஆளாநிற்பன், இரண்டில் ஒன்று - இவ்விரண்டில் ஒன்றைச் செய்தல் திண்ணம் இதே - இஃது உறுதியேயாம், (எ - று.) அஃதே, அஃதே ; நன்றே, நன்றே என்னும் அடுக்குகள் வெகுளி பற்றி வந்தன. அழல்வேகன் இறந்தானோ! அங்ஙனமாயின் இன்றே நம் பகைவர்களைக் கொன்று, சுரமை நாட்டையும், மலைநாட்டையும் கைக்கொள்வேன்; அவ்வாறு செய்யேனெனில் உயிர் நீப்பேன் எனச் சூள் மொழிந்தான் சுவணகேது என்க. | ( 206 ) |
| (பாடம்) 1 வீடினா. 2 ரமருலகாளவ் விரண்டி லொன்று திண்ணமே. | | |
|
|