பக்கம் : 841 | | சுவணகேதுவினைச் சடிமன்னன் எதிர்தல் | 1337. | என்னா விரண்டு மருங்1கினுமற் றிளநல்யானைக் குழாஞ்சூழப் பொன்னார் தேரும் 2புரவிகளு மிடைந்து பூமி பொறைகூர முன்னாற் செல்ல வருவானை முந்நீர் வண்ணன் றன்மாமன் மின்னார் விளங்கு விறல்3வேலான் கண்டே வெகுண்டு மேற்சென்றான். | (இ - ள்.) என்னா - என்று சூள் மொழிந்து, இரண்டு மருங்கினும் - தன் இருபக்கத்தும், மற்று, இளநல்யானைக் குழாம்சூழ - இளமை மிக்க நல்ல யானைக் கூட்டங்கள் சூழ்ந்து வர, பொன்ஆர் தேரும் புரவிகளும் - பொன்னாலியன்ற தேர்களும் குதிரைகளும், மிடைந்து - நெருங்குதலாலே, பூமிபொறை கூர - நிலம் சுமை மிகுதியால் வருந்த, முன்னாற் செல்ல வருவானை - தன் முன்னர்ப் போர்க்குப் போக வருகின்ற சுவணகேதுவை, முந்நீர்வண்ணன் தன் மாமன் - திவிட்டன் மாமனும், மின்ஆர் விளங்கும்விறல்வேலான் - ஒளி பொருந்தித் திகழும் வெற்றி வேலையுடையோனுமாகிய சடிமன்னன், கண்டு - பார்த்து, வெகுண்டு - சினங்கொண்டு, மேற் சென்றான் - அவன் பாற் போர் செய்யச் சென்றான், (எ - று.) அவ்வாறு சூளுற்று வருகின்ற சுவணகேது என்பானைச் சடி மன்னன் கண்டு சினந்து அவன் எதிரேசென்று தடுத்தான் என்க. | ( 207 ) | | 1138. | கானற் புரவி கலிமாவோ டெதிர்ந்த கருங்கை 4மதவேழ மான யானை தம்மோடே மலைந்த தேரு மாறேற்ற ஈன மில்லா விளையாரோ டிளையார் திளைத்தா ரிவ்வகையே தானை 5தம்முட்டாக்கலுறத் தாமுந் தம்முட் டலைப்பெய்தார். | (இ - ள்.) கால்நல் புரவி கலிமாவோடு எதிர்ந்த - கால்களாலே நல்லனவாகிய குதிரைகள் கனைக்கின்ற குதிரைகளோடு எதிர்த்தன, கருங்கை மதவேழம் - கரிய துதிக்கையையுடைய மதம் பொழிகின்ற யானைகள், மானயானை தம்மோடே மலைந்த - மானம் போற்றும் யானைகளோடே போர் செய்தன, தேரும் மாறுஏற்ற - தேர்களும் தம் பகைத்தேர்களோடே எதிர்த்தன, ஈனமில்லா இளையாரோடு இளையார் திளைத்தார் - குற்றமற்ற | |
| (பாடம்)1 கினுமிளநல்யானை. 2 புரவி. 3 வேலினான். 4 வேழமும். 5 தம்முட்டாக் கினமுன் றம்முட் போருட் டலைப் பெய்தார். | | |
|
|