பக்கம் : 846 | | விசாலவட்டம் என்னும் கணைக் குடையாற் சடிவேந்தன் சுவணகேது தன்மே லேவிய கணைகள் படாதபடி தடுத்துக்கொண்டான் என்பதாம். | ( 213 ) | சுவணகேது மாயப் போர் தொடங்கல் | 1344. | வில்லாற் செய்ய விசாலவட்டந் தன்னா1லந்தில் விலக்கப்பட் டெல்லாத் திசையுஞ் சரஞ்சிந்தி யிருளவீழு மெல்லை 2தன்னுட் சொல்லாற் புகழ்தற் கரியான்பாற் 3றூணி வறிய வாதலுந்திண் மல்லாற் செய்த தோளான்மேன் மாய வெம்போர் செய்குற்றான். | (இ - ள்.) வில்லால் செய்த விசாலவட்டம் தன்னால் - வில் வித்தையாலே இயற்றப்பட்ட விசாலவட்டத்தாலே, (அந்தில்) விலக்கப்பட்டு - தடையுண்டு, சரம் - சுவணகேது தொடுத்த அம்புகள், எல்லாத் திசையும் சிந்தி இருள - நான்கு திக்குகளினும் சிதறிச் சென்று இருளைப் செய்யும்படி, வீழும் எல்லை தன்னுள் - விழுகின்றபொழுது, சொல்லாற் புகழ்தற்கு அரியான்பால் - சொல்லாலே புகழ்தற்கியலாத பெருமையுடைய அச்சுவணகேதுவின், தூணி - அம்புப் புட்டில்கள், வறியவாதலும் - அம்புகள் இன்றி வறும் புட்டில்கள் ஆய்விட்டனவாக, திண்மல்லால் - திண்ணிய மற்போராலேயே, செய்த - செய்ததை ஒத்த, தோளான்மேல் - தோள்களையுடைய சடியரசன்மேலே, மாய வெம்போர் செய்குற்றான் - மாயத்தாலாகிய வெவ்விய போர்த் தொழிலைச் செய்யத் தொடங்கினான், (எ - று.) அந்தில் : அசைநிலை. தூணி இரண்டுண்மையின் வறிய எனப்பன்மையாற் கூறினர். சுவணகேதுவின் கணைப்புட்டில் வற்றிப் போனவுடன், சடியரசனை விற் போரால் வெல்லுதல் இயலாது என்று கண்ட சுவணகேது, மாயப் போர் செய்யத் தொடங்கினான், என்க. | ( 214 ) | சடிமன்னனின் போர்த்திறம் | 1345. | செய்ய லுற்ற மாய4மதுஞ் சிலையு நிலையுஞ் 5சுருங்கியவைத் தெய்ய லுற்ற பகழியையு மெண்ணி வேந்த 6னெதிர்செறுப்பான் | | |
| (பாடம்) 1தன்னால். 2யுட். 3துணிய. 4முஞ். 5சுருங்க. 6னென் செய்தான். | | |
|
|