பக்கம் : 847 | | | | மைய லுற்ற மதயானை மலைப்ப வுந்தி மாற்றானை நையலுற்றா யெனவுரையா நாம வாளி சிந்தித்தான். | (இ - ள்.) செய்யலுற்ற மாயம்அதும் - சுவணகேது இயற்றிய மாயப் போரின் தன்மையும், சிலையும் நிலையும் - வில்லின் இயல்பும் நின்று எய்யும் நிலையும், சுருங்கிய வைத்து - சுருங்கியிடத்தவாய் வைத்து, எய்யலுற்ற - செலுத்துகின்ற, பகழியையும் - அம்புகளையும், எண்ணி - ஆராய்ந்து, வேந்தன் - சடிமன்னன், எதிர் செறுப்பான் - அவன் எதிரே நின்று போர்செய்யும் பொருட்டு, மையலுற்ற மதயானை - மதமயக்கமுடைய தன் யானையை, மலைப்ப உந்தி - பகைவன் திகைக்கும்படி செலுத்தி, மாற்றானை - சுவணகேதனனை நோக்கி, நையலுற்றாய் என உரையா - நீ மிகவும் வருந்திவிட்டாய் போலும் என்று வினவி, நாமவாளி - அச்சந்தரும் அம்புகளை, சிந்தித்தான் - ஏவினான், ( ) சுருங்கி - நாணிடத்தே அம்பு தொடுத்தற்பொருட்டுச் சிறிது தடிப்புடையதாய் அமைக்கப்பட்ட இடம். சிந்தித்தான் - சிந்தினான். மாயப் போர் தொடங்கிய சுவணகேதுவினோடு போர்செய்யும் பொருட்டுச் சென்ற சடிவேந்தன் யானையை ஏறி விற்போர் தொடங்கினான் என்க. | ( 215 ) | | 1346. | 1தொடுத்தான் றொழுத வாளியது சுவண கேது கையகத்து மடுத்த சிலையும் பகழியும் 2வெம் மனத்துக் கொண்ட மாயமது மடுத்துத் 3துணித்தப் புறமேகி யரசர் குழாங்க ளிரியப்பாய்ந் துடுத்த தூவி தோன்றாமை நிலத்தி னுள்புக் 4கொளித்ததுவே. | (இ - ள்.) தொழுத வாளியது தொடுத்தான் - சடிமன்னன் மந்திர மொழிகள் கூறித் தொழப்பட்ட அம்புகளைத் தொடுத்தானாக அவ்வம்புகள், சுவணகேது கையகத்து மடுத்த சிலையும் - சுவணகேது தன் கையாற்பற்றிய வில்லினையும், வெம்மனத்துக் கொண்ட மாயமதும் - அவன் தன் வெவ்விய மனத்துள்ளே சிந்தித்த மாயவித்தையையும், அடுத்துத் துணித்து - நெருங்கிப் பிளந்து, அப்புறமேகி - அவற்றின் அப்பாலும் சென்று, அரசர் குழாங்கள் இரியப் பாய்ந்து - பகைமன்னர் கூட்டங்கள் புறமிட்டோடுமாறு அக்குழுவினுள்ளும் புகுந்து, உடுத்த தூவி தோன்றாமை - மேலும் தம்பாற் கட்டப்பட்டுள்ள சிறகுகள் தாமும் வெளியே தோன்றாதபடி, நிலத்தினுள் புக்குஒளித்தவே - பூமியினுள்ளே புகுந்து மறைந்தன, (எ - று.) | |
| (பாடம்)1 தொடுத்த வாளி யது பொழுதே. 2 மனத்துக் கொண்ட மாயமும். 3 துணி செய்தப்புறம்போய். 4 கொளித்ததே. | | |
|
|