பக்கம் : 849 | | இருவருடைய ஊர்திகளாகிய களிறுகளும் தம்முட் பொருதல் | 1348. | இப்பா லிவர்கள் பொரும்பொழுதி னியானை யிரண்டு மெதிர்தாக்கிக் கைப்பா லெடுத்துக் கறைமருப்பு மிடைந்து கண்க ளெரிசிந்தி மெய்ப்பா லெடுத்துக் 1குத்தியுமெய் விலங்கிப் பாய்ந்து மொன்றொன்றைப் பொய்ப்பா லின்றி யெடுத்திட்டுப் புடைத்தும் 2பெயர்த்தும் பொருதனவே. | (இ - ள்.) இவர்கள் பொரும்பொழுது - இவ்வாற்றானே இவ்விரு மறவர்களும் போர் ஆற்றும்பொழுது, இப்பால் யானையிரண்டும் இன்னுசெய்குசார் இவர்கள் ஊர்ந்து வந்தனவாகிய இரண்டு யானைகளும், எதிர்தாக்கி - தம்முள் மாறுபட்டு ஒன்றோடொன்று மோதி, கைப்பால் எடுத்து - கையாலே பற்றித் தூக்கியும், கறை மருப்பு மிடைந்து - குருதிக்கறைபடிந்த தம் கோடுகள் சேரப் பொருத்தியும், கண்கள் எரிசிந்தி - தத்தம் கண்கள், தீக்கால், எடுத்து மெய்ப்பால் குத்தியும் - தம் கோடுகளை உயர்த்தி ஒன்றனை ஒன்று உடல்புகக் குத்தியும், விலங்கி - விலகி, பாய்ந்தும் - ஓடியும், ஒன்றை ஒன்று - ஒரு யானையை மற்றொரு யானை, பொய்ப்பால் இன்றி - விளையாட்டு வகையானன்றி மெய்யாகவே, எடுத்திட்டுப் புடைத்தும் - தூக்கியும் தாக்கியும், பெயர்த்தும் - நிலை பெயரும்படி உந்தியும், பொருதனவே - போர் புரியலாயின, (எ - று.) ஏ : அசை, சுவணகேதுவும், சடிமன்னனும் இவ்வாறு போர் செய்யும் பொழுது அவர்கள் ஊர்திகளாகிய யானைகளும், தாக்கி, மிடைந்து, சிந்தி, குத்தியும், பாய்ந்தும், புடைத்தும், பெயர்த்தும், பொருதன என்க. | ( 218 ) | | 1349. | துண்ட வேகப் புள்ளுயர்த்தான் றுளைக்கை யானைச் சுடர்முடியான் புண்ட ரீகக் கொலையானைக் குடைந்து போகும் பொழுதகத்துக் கொண்ட வாளன் கேடகத்தன் குதிகொள் வான்போ லெழுந்தெதிரே மண்டு வானை வயவேந்தன் கண்டு வாளி 3மழைபொழிந்தான். | | |
| (பாடம்) 1குத்தியும் விலங்குப். 2 பெயர்த்தும். 3சிந்தினான். | | |
|
|