பக்கம் : 851 | | சுவணகேதுவின் வாளும் கேடகமும் கவசமும் மார்பும் ஊடுருவிக் சடிமன்னன் அம்புகள் கழிந்தனவாகச் சுவணகேது மாண்டான், என்க. | ( 220 ) | விஞ்சையர் படை புறமிடல் | 1351. | தூவி யார்சுவ ணக்கொடி மேவி னான்பட வேமிகை 1மாவி னார்படை வாரிபோர் ஓவி யாங்குடை வுற்றதே. | (இ - ள்.) தூவி ஆர் சுவணக் கொடி - சிறகுகளையுடைய கருடப் பறவையை எழுதிய கொடியை, மேவினான் - மேற்கொண்டவனாகிய சுவணகேது, படவே - போரின்கண்ணே மாண்டு வீழ்தலுமே, மிகை மாவினார் படைவாரி - மிகுதியாய யானை குதிரைகளையுடைய விஞ்சையர் படையாகிய கடல், போர்ஓவி - போர் செய்தலை ஒழித்து, ஆங்கு - அப்பொழுது, உடைவுற்றது - புறங்கொடுத் தோடிற்று, (எ - று.) சுவணகேது மாண்டவுடன் அச்சுவகண்டன் படைகள் புறங்கொடுத்து ஓடலாயின, என்க. | ( 221 ) | சிறீசேனன் போர்க் கெழுதல் | 1352. | வென்று வேற்றவர் நின்றனர் என்ற மாற்ற மிசைத்தலும் நன்று நன்றென நக்குமேல் சென்ற னன்சிறீ சேனனே. | (இ - ள்.) வென்று வேற்றவர் நின்றனர் - நம்படையை வென்று நம் பகைவர் செருக்குற்று நின்றனர், என்ற மாற்றம் - என்ற மொழிகளை, இசைத்தலும் - தூதர்கள் தன்பாற் கூறியவுடனே, சிறீ சேனன் - சிறீசேனன் என்னும் வீரன், நன்று நன்று என நக்கு - நன்று நன்று அவ்வாறாயிற்றோ என்று சினந்து சிரித்து, மேல் சென்றனன் - பகைவர் மேல் போரிட விரைந்து போயினான், (எ - று.) | |
| (பாடம்) 1 மாவி னாற்கடற் றானைபோர். | | |
|
|