பக்கம் : 852
 

     தம்படை புற மிட்டமையும் பகைவர் வென்றமையும் தூதரால் உணர்ந்த சிறீசேனன்
சினந்து சிரித்துப் போர்மேற் சென்றான் என்க.
 

( 222 )

சிறீசேனன் உடைந்தோடும் தன் படையைத் தடுத்தல்

1353. கடைந்த கார்க்கடல் போற்கலந்
1துடைந்த வாட்படை யோடுநீர்க்
கடைந்த வான்சிறை யாயினான்
மிடைந்த வேற்படை வீரனே.
 
     (இ - ள்.) கடைந்த கார்க் கடல்போல் கலந்து உடைந்த - கடையப்பட்ட கரிய
கடல்போலே பகைப்படையோடு போர் செய்து கலங்கிப் புறங்கொடுத்த, ஆட்படை -
காலாட்படையாகிய, ஓடுநீர்க்கு - விரைந்து ஓடுகின்ற வெள்ளத்திற்கு, மிடைந்த வேற்படை
வீரன் - செறிந்த வேல்வீரர் படையுடன் சென்ற சிறீசேனன் என்பான், அடைந்த வான்
சிறை ஆயினான் - எதிரே அடைக்கப்பட்ட ஓர் உயரிய அணையாகித் தடுத்தான், (எ -
று.)

     அடைந்த - அடைத்த: மெலித்தல் விகாரம். வாட்படை எனக் கண்ணழித்து
வாளேந்திய படையெனக் கொள்ளினும் ஆம்.

     புறங்கொடுத்து ஓடுகின்ற தம் படையாகிய ஆற்றிற்கிட்ட அணை போன்று, எதிர்
நின்று சிறீசேனன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான், என்பதாம்.
 

( 223 )

சிறீசேனன் புறமிட்டோரை இடித்துரைத்தல்

1352. விஞ்சை வேந்தர்க ளேமிகை
அஞ்சு வாரென வாயிடை
நஞ்ச னார்களை 2நக்குவை
3வெஞ்சொ லான விளம்பினான்.
 
     (இ - ள்.) மிகை அஞ்சுவார் விஞ்சை வேந்தர்களே, என - போர்க்களத்தே பெரிதும்
அஞ்சுபவர்கள் விச்சாதர மன்னர்களே போலும் என்று கூறி, நஞ்சனார்களை - நஞ்சை
யொத்த தன் படை மன்னர்களை, நக்கு - இகழ்ந்து சிரித்து, வைவெஞ்சொல் ஆன
விளம்பினான் - வைதற்குரிய சுடுசொற்களைத் தன்னால் இயன்றவரையில் கூறினான், (எ -
று.)
 

     (பாடம்) 1 துடைந்து வாட்படை வெள்ளநீர்க். 2நக்கிவை. 3கொஞ்சிலான்
சிலகூறினான்.