“மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்து விடத்து“ (திருக். செய். 968) என்னும் திருக்குறளை ஈண்டு ஒப்பு நோக்குக. குன்றின் மேற் குடைவேந்திர் என்றது இகழ்ச்சி. என்னை ? பகைவர் ஏறுதற்கரிய குன்றின் உச்சியிலிருத்தலால் நுங்கள் குடையுடன் நீவிர் வேந்தராயிருந்தீர் போலும், என்னும் குறிப்பிற் கூறினானாகலின் என்க. |
( 226 ) |
இதுவுமது |
1357. | மான மாமணி வீழ்த்துயிர்க் கூன மாமென வோடுவீர் 1ஈன வார்மயிர்க் கேதமாங் கான மாவது காணுமே. |
(இ - ள்.) மானமாம் மணி வீழ்த்து - மானம் என்னும் பெறற்கரும் மணியை எறிந்துவிட்டு, உயிர்க்கு ஊனமாம் என ஓடுவீர் - ஈண்டு நிற்கில் நம்முயிர்க்கு உடலிழப்பாகிய ஊனம் நேரும் என்று அஞ்சி ஓடாநிற்பீர், ஈனவார் மயிர்க்கு - எளிய ஒரோ ஒரு நீண்ட மயிரின் பொருட்டு, ஏதமாம் - இறந்தொழியும், கான மா - கவரிமான், அது காணுமே - அம்மானின் சிறப்பைச் சிறிது சிந்தித்துப் பாருங்கோள், (எ - று.) “மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னா ருயிர்நீப்பர் மானம் வரின்“ (திருக்கு - 969) என்னும் திருக்குறளை ஈண்டு ஒப்பு நோக்குக. ஓர் எளிய மயிரின் பொருட்டுக் கவரிமா உயிர்விடும், நீயிரோ அத்தகைய உயிரினை ஓம்பற் பொருட்டுப் பெறற் கரிய மணிபோன்ற மானத்தை இழந்து ஓடுதிர், என இரங்கினான் என்க. |
( 227 ) |
உடைந்த வீரர் மீண்டும் போரேற்றல் |
1358. | ஈண்ட வின்னன சொல்லலு மீண்டு விஞ்சைய ரேற்றனர் ஆண்ட கைச்சுட ராயிடைத் தூண்டி னான்சுடர் வேலினான். |
(இ - ள்.) ஈண்ட - நெருங்க, இன்னன சொல்லலும் - இன்னோரன்ன மொழிகளைச் சிறீசேனன் எடுத்துரைத்தவுடனே, விஞ்சையர் மீண்டு ஏற்றனர் |
|
|
(பாடம்) 1 கானவார்மயிர்க்கேதமாம். |