பக்கம் : 855
 

     - அவ்விச்சாதரர்கள் நாணி மீண்டும் போர் ஆற்றச் சமைந்தனர், சுடர் வேலினான் -
ஒளியுடைய வேற்படையுடைய சிறீசேனன், ஆயிடை - அச்செவ்வி தேர்ந்து, ஆண் தகை
சுடர் தூண்டினான் - தன் வீர மொழிகள் என்னும் கோலாலே அப்படைஞர்களின்
மறத்தன்மை என்னும் விளக்கு நன்கு எரியுமாறு தூண்டிவிட்டான், (எ - று.)

ஆண்மையால் வீரர்கள் புகழ்விளக்க மடைதலின் அதனை ஆண்ட கைச் சுடர் என்றார்.
சிறீசேனன் பல மற மொழிகளால் புறமிட்டோரின் மனத்தைத் தேற்றி அவர்கள் மீண்டும்
போர் புரிதற்குரிய துணிவினைப் பெறும்படி செய்தான் என்பதாம்.
 

( 228 )

இது முதல் நான்கு செய்யுள் ஒருதொடர் (போர்த்திறம்)

1359. 1மிண்டு வாளினர் விஞ்சையர்
மண்டி னாரெதிர் மண்டலுங்
2கண்ட கண்டம தாயினார்
3விண்ட னர்படை வீரரே.
 
     (இ - ள்.) மிண்டு - நெருங்கிய, வாளினர் - வாள்களை உடையராய், விஞ்சையர் -
விச்சாதரர்கள், எதிர்மண்டினார் - திவிட்டன் படைகளுக்கு எதிராக மண்டுவாராயினர்,
மண்டலும் - மண்டிய அப்பொழுதே, கண்ட கண்டமதாயினர் - தம் பகைவர்களால் துண்டு
துண்டுகளாகத் தம்முடல் வெட்டப்பட்டு வீழ்ந்தனர், விண்டனர் படை வீரரே - எஞ்சிய
படைமறவர்கள் ஓடிப் போயினர், (எ - று.)
வெற்றியினாற் செருக்குற்று நின்ற திவிட்டன் படைக் கெதிர் சென்ற விச்சாதரர்
கண்டகண்டமாக வெட்டப்பட்டனர், என்க.
 

( 229 )

 

1360. கருவிப் புட்டிலின் கண்டமும்
4பொருவில் பக்கரைப் போழ்களும்
விரவி 5வெங்கள வாயெலாம்
புரவித் துண்டங்கள் போர்த்தவே.
 
     (இ - ள்.) கருவிப் புட்டிலின் கண்டமும் - அம்புப் புட்டில்களின் தூள்களும்,
பொருவில் போழ்களும் - போர்வில்லின் துண்டுகளும், பக்கரைப் போழ்களும் -
சேணத்தின் துகள்களும், விரவி - கலந்து, வெங்கள வாய் எலாம் - வெவ்விய போர்க்கள
முழுதும், புரவித் துண்டங்கள் - குதிரையின் உடல் உறுப்புகளும், போர்த்தவே -
மறைத்தன, (எ - று.)
 

     (பாடம்) 1கொண்ட. 2கண்டங்கள் கண்டங்கள் ஆயினார். 3விண்ட வாட்.
4இருமிப். 5போர்க்கள.