பக்கம் : 857
 
 
1363 சிறீசேனன் வருகை
மாலும் வாட்படைப் போரினுள்
ளாலு மாமிசை யானவன்
1காலன் காணென வந்தனன்
சீல மானசி றீசேனனே.
 
      (இ - ள்.) மாலும் - மயங்குதற்குக் காரணமான, வாட்படைப் போரினுள் - வாளால்
ஆற்றுகின்ற போர்க்களத்திலே, ஆலும் மாமிசை ஆனவன் - கனைக்கின்ற புரவிமேலே
அமர்ந்து வருவோன், காலன்காண் - மறலியேகாண், என - என்று கண்டோர் கூற,
வந்தனன் - அவ்விடத்தே வந்தான், சீலமான சிறீசேனன் - ஒழுக்கமும் மானமும் மிக்க
சிறீசேனன் என்பான், (எ - று.)

     கண்டோர் இவன் கூற்றனேகாண் என்று கூறும்படி குதிரையில் ஏறிச் சிறீசேனன்
போர்க்களத்தே புக்கான் என்க.

(233)

சிறீசேனன் வீரமொழி

1364. மண்ணின் மேல்வரு வாரொடு
மண்ணின் மேற்செரு வல்லனே
விண்ணின் மேல்2வரு வாரொடு
விண்ணின் மேற்செரு வல்லனே.
 
     (இ - ள்.) மண்ணின் மேல் வருவாரொடு - நிலத்தின் மேலே வந்து போரிடும்
மக்களோடே, மண்ணின் மேற்செரு வல்லன் - மண்ணின் மேல் நின்று செய்யும் மக்கட்
போரினும் யான் நனி ஆற்றலுடையேன் அங்ஙனமன்றி, விண்ணின் மேல் வருவாரொடு -
விசும்பிடத்தே இயங்கும் இயல்புடைய விஞ்சையருடனே, விண்ணின்மேற் செருவல்லன் ஏ -
விசும்பிலே நின்று செய்யும் தெய்வப் போரினும் யான் நனி ஆற்றலுடையேன், கண்டீர்,
(எ - று.)

     அவ்வாறு வந்த சிறீசேனன், என்னுடன் மானுடர் எதிர்ப்பின் மக்கட் போருஞ்
செய்யவல்லேன் ; விச்சாதரர் எதிர்ப்பின் தெய்வப் போருஞ் செய்யவல்லேன் என்றான்
என்க.

(234)

இதுவுமது
1365. வாய்ந்த போரிவை வல்லிரே
லேந்து மின்படை போந்தெனக்
 

     (பாடம்) 1 காலனா மென. 2 லுறை.