| | காய்ந்த கட்டுரை கேட்டலுஞ் 1சேர்ந்த னன்சிறீ பாலனே. |
| இ - ள்.) வாய்ந்த போர் இவை வல்லிரேல் - இவ்விரு வகைப் போரினுள் நுமக்குப் பொருந்திய போர் என்னோடு ஆற்றவல்லீர் உளீராயின், போந்து படை ஏந்துமின் என - என் எதிரே வந்து படைக்கலத்தை ஏந்துங்கோள் என்று சிறீசேனன் கூறிய காய்ந்த கட்டுரை - சினத்தால் எழுந்த அறை கூவும் மொழிகளை, கேட்டலும் - செவியுற்ற பொழுதே, சிறீபாலன் சேர்ந்தனன் - திவிட்டன் படைத்தலைவருள் ஒருவனான சிறீபாலன் என்பான் அச்சிறீசேனனுக்கு முன்சென்று சேர்ந்தான், (எ - று.) “இவ்விருவகைப் போரினுள் யாது நுமக்கு விருப்பமானது அப்போரே யானும் செய்வல், வல்லீர் ! வருக!“ என, சிறீசேனன் அறை கூவக் கேட்ட சிறீபாலன் அவன்முன் சென்றெதிர்ந்தான் என்க. |
| (235) |
| 1366. | சிறீசேனனைச் சிறீபாலன் எதிர்தல் உவரி 2யோங்கு திரையெனக் கவரி வேய்ந்த 3கலினமா விவர வேறி னானரோ வெவரு மஞ்சு மீட்டினான். |
(இ - ள்.) உவரி ஓங்கு திரையென - கடலிலே எழுகின்ற அலைபோலே, கவரி வேய்ந்த கலினமா - உச்சியிற் சாமரை சூட்டப் பெற்ற வொரு குதிரையை, இவர ஏறினான் - செலுத்தும் பொருட்டு (அதன்மேல்) ஏறலானான், எவரும் அஞ்சம் ஈட்டினான் - எத்தகைய மறவரும் அஞ்சுதற்குக் காரணமான மறமாண்புடைய சிறீபாலன், (எ - று.) ஈடு - மாண்பு. சிறீபாலன் திரைபோன்ற கவரிசூட்டிய குதிரையை ஏறி எவரும் அஞ்சும்படி வந்தான் என்க. |
| (236) |
| சிறீபால சிறீசேனர் போர்த்திறம் |
| 1367. | திரிவில் 4சாரி கைச்செயல் புரவி சேர்ந்து பொங்கின 5வரிவில் வாளி மன்னரு மருவு 6போர்ம யங்கினார். |
| இதுமுதல் பதினொரு செய்யுள்கள் ஒருதொடர். |
|
(பாடம்) 1 சேந்தனன்சிரீ. 2வெண்டிரை யென. 3கலனமா. 4காரிகைத் தொழில். 5உருவுவாளர். 6போரின். |