பக்கம் : 859 | | (இ - ள்.) திரிவு இல் சாரிகைச் செயல் - மாறுபாடிலாத சாரிகைத் தொழிலிலே, புரவி சேர்ந்து பொங்கின - இருவருடைய குதிரைகளும் பொருந்திச் சினந்தன, வரி வில் வாளி மன்னரும் - வரிந்த வில்லையும் அம்புகளையுமுடைய சிறீசேன சிறீபாலரும், மருவு போர் மயங்கினார் -நெருங்கிய போர்த் தொழிலிலே பொருந்துவாராயினர், (எ - று.) இருவர் குதிரைகளும் சாரிகை சுற்றின ; இருவரும் போர் செய்யத் தொடங்கினர் என்க. | (237) | 1368. | வில்லும் வாளும் 1வேல்களுஞ் சொல்லி னாற்றொ ழிற்கொளீஇ 2யெல்லை யின்று பொழுதெலாந் தொல்ல மர்தொ டங்கினார். | (இ - ள்) வில்லும் வாளும் வேல்களும் - விற்படையாலும், வாட்படையாலும் வேற்படையாலும், சொல்லினால் - மந்திரமொழிகளை ஓதுதல் வாயிலாய், தொழில் கொளீஇ - போர்த் தொழிலை மேற்கொண்டு, எல்லையின்று - ஒரு காலவரையின்றி, பொழுதெலாம் - அந்நாள் முழுதும், தொல் அமர் தொடங்கினார் - தொன்று தொட்டுத் தமக்குரித்தாய் வருகின்ற போர் செய்தலைத் தொடங்கினார்கள். (எ - று.) வில் முதலியவற்றாலும், மந்திரமோதிப் பழைய முறைமைத்தாய போரை இருவரும் நெடுநேரம் ஆற்றினர் என்க. | (238) | 1369. | வெல்லு நீர விஞ்சையன் வில்லும் வீசு குந்தமும் வல்லி 3தின்ம டித்தனன் மல்ல மர்ந்த மார்பினான். | (இ - ள்.) வெல்லும் நீர் அ விஞ்சையன் - வெல்லும் தன்மையுடைய அந்தச் சிறீசேனனுடைய, வில்லும் - வில்லையும், வீசு குந்தமும் - பின்னர் வீசிய குந்தாலியையும், வல்லிதின் - வன்மையுடனே, மடித்தனன் - அழித்தான், மல்லமர்ந்த மார்பினான் - மற்போரை விரும்பும் தோள்களையுடைய சிறீபாலன், (எ - று.) அவ்வாறு போர் செய்யும்பொழுது சிறீசேனனுடைய வில்லினையும் குந்தத்தினையும் சிறீபாலன் அழித்தான் என்க. | (239) |
| (பாடம்) 1 குந்தமும். 2 எல்லையில் பொழுதெலாம். 3 தின்ன றுத்தனன் | | |
|
|