உடன்பாடு பெற்று உள்ளே செல்வேனாயின்; வேந்து காண்குறுவன் கொல்ஓ - அரசன் என்னைக் காண்பானோ?; நீ இடை அறிசொல் - நீசென்று செவ்வியறிந்து வந்து தெரிந்து சொல்வாயாக; என்று நெறியில்சொன்னான் - என்று முறைப்படி கூறினான். (எ - று.) “அறிவோர்க்கழகு கற்றுணர்ந்தடங்கல்“ ஆதலின் ‘அலகின் மெய்ந்நூ லளவு சென்றடங்கி நின்றான்‘ என்றார். அளவும் என்னல் வேண்டிய முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. செல்லுதல் அறிதல் என்னும் பொருளது. நிமித்திகன் என்னும் வடசொல்லுக்குப் பொருள் குறிகாரன் என்பது. குறிகாரன் அரசர்கட்கு உறுதிச் சுற்றத்துள் ஒருவனாவன். இங்கு வந்துள்ள குறிகாரனுடைய பெயர் அங்கதன் என்பது தூதுவிடு சருக்கத்தால் பெறப்படும். |
( 34 ) |
அரசன் நிமித்திகனை வரவேற்றல் |
104. | ஆங்கவ னரசர் கோமான் குறிப்பறிந் தருளப் பட்டீர் ஈங்கினிப் புகுமி னென்றா னிறைவனை யவனுஞ் சேர்ந்தான் வீங்கிருந் தானை யானும் வெண்மலர் பிடித்த கையால் ஓங்கிருந் தானங் காட்டி யுவந்தினி திருக்க வென்றான். |
(இ - ள்.) அவன் - வாயிற் காவலாளன்; அரசர்கோமான் குறிப்பு அறிந்து - மன்னனுடைய குறிப்பினை அறிந்துவந்து; அருளப்பட்டீர் - ஐய! நீயிர் அரசனால் அருள் செய்யப்பட்டிருக்கிறீர் ஆதலால்; ஈங்கு - இவ் விடத்தில்; இனிப்புகுமின் என்றான் - இனி உள்ளே செல்வீராக என்றான்; இறைவனை - பயாபதி மன்னன் இருக்கும் இடத்தை; அவனும் சேர்ந்தான் - அந்த நிமித்திகனும் அடைந்தான்; வீங்குஇரும் தானையானும் - மிகுந்த பெரிய படையை யுடையவனான பயாபதிமன்னனும்; வெள்மலர் பிடித்தகையால் - வெள்ளிய மலரையேந்திய கையினாலே; ஓங்கு இரும்தானம் காட்டி - உயர்ந்த பெரிய இருக்கையொன்றைச் சுட்டிக்காட்டி; உவந்து இனிது இருக்க என்றான் - மகிழ்ந்து இனிமையுடன் அமர்க என்றுகூறினான். (எ - று.) ஆங்கு - அசை. குறிகாரனாகிய அங்கதனைக்கண்ட அரசன், மலர்பிடித்த தனது கையினால் ஓர் இருக்கையைக்காட்டி அதில் அமருமாறு பணித்தான். குறி கூறுதலில் வல்லவனாகிய இவன் அரசனுக்கு மிகுந்த பழக்கமானவன், இனி என்பது இடம் நோக்கி இப்பொழுது என்னும் பொருளையுந்தரும். அரசர்கள் மங்கலங்கருதி வெண்மலரைக் கையிற் பற்றியிருத்தல் மரபு. |
( 35 ) |