பக்கம் : 860
 
 
1370. அற்ற 1குந்த வில்லினாற்
செற்ற லன்றெ ழித்துமேற்
கொற்ற வன்றன் 2கோகின்மேல்
3வெற்றி வாளின் வீசினான்.
 
     (இ - ள்.) குந்தம் வில்லினால் - தன் குந்தமும் வில்லும், அற்ற - அற்றனவாதல்
காரணமாக, செற்றலன் தெழித்து - அப் பகைவனாகிய சிறீசேனன் உங்கரித்து, மேல் -
அப்புறம், கொற்றவன்றன் கோகின்மேல் - சிறீபாலனுடைய தோளின் மேலே, வெற்றி
வாளின் - தனது வெற்றியுடைய வாளை, வீசினான் - வீசுவானாயினன், (எ - று.)

     செற்றலன் - சிறீசேனன், அவன் தெழித்தமைக்கு அற்ற குந்தம் வில் இரண்டும் ஏது
வென்பார் வில்லினால் என, ஆல் உருபு கொடுத்தார். சிறீசேனன் உங்காரஞ்செய்து
சிறீபாலன் தோளின்மேல் வெற்றிவாள் வீசினன் என்க.

(240)

 
1371. ஒளித யங்கு 4மொண்புயத்
தெளித மாவெ றிந்தவா
டுளித 5மாவு டற்றினான்
பளித நாறு 6பண்பினான்.
 
(இ - ள்.) ஒளிதயங்கும் ஒண்புயத்து - ஒளியாலே திகழ்கின்ற சிறீபாலனுடைய ஒள்ளிய
தோளின் மிசை, எளிதமா - எளிதாக, எறிந்த வாள் - சிறீசேனன் வீசிய வாட்படை,
துளிதமா - தூளாகும்படி, பளிதநாறு பண்பினான் - கற்பூர மணங்கமழும் மேனியையுடைய
சிறீபாலன், உடற்றினான் - செய்தான், (எ - று.)

எளிதம் - எளிது. துளிதம் - தூளிதம் ; துகள். எளிதிற் றுளிதமாம் படி என்று
கூட்டினுமாம். பளிதநாறு பண்பினான் - சிறீபாலன், சிறீபாலன் சிறீசேனன் வீசிய
வாட்படையை எளிதாகத் தூள்படச் செய்தான் என்க.
 

(241)

1372.

தளித யங்கு தண்மதுக்
களித யங்கு கண்ணியாற்
குளித வாளி னுற்றபுண்
ணெளித மாயி லங்குமே.
 

     (பாடம்) 1 குந்த மாண்டவச். 2 றோளின். 3 வெற்ற. 4 தோளின் மேலெ.
5 மாக நீட்டினான். 6 மேனியான்.