பக்கம் : 861
 
     (இ - ள்.) தளிதயங்கு தண்மது களிதயங்கு கண்ணியால் - துளியாக விளங்கும்
குளிர்ந்த தேன் பொருந்தி மகிழ்ச்சி மிகுதற்குரியதான மலர் மாலையாலே, குளித வாளின் -
தன் தோளிலே அழுந்திய பகைவனுடைய வாள் தடையுண்டமையால், எளிதமா உற்ற புண்
- சிறிதே உண்டாய புண், இலங்கும் - மிளிரா நின்றது, (எ - று.)

     குளித வாள் - குளித்த வாள் ; கெடுதல் விகாரம். எளிதம் - சிறிது, மாலையால்
தடையுண்டு சிறிதாகிய புண் இலங்கும் என்க.

(242)

1373. இட்ட 1வாளி றுத்தபின்
விட்ட மாவின் 2மேற்செலாத்
துட்ட 3மாத்து ரந்தனன்
மட்டு வார்ந்த மாலையான்.
 
     (இ - ள்.) இட்டவாள் இறுத்தபின் - இவ்வாறு தான் வீசிய வாளைச் சிறீபாலன்
துகளாக்கிய பின்னர், விட்டமாவின் - சிறீபாலன் ஊர்ந்த குதிரைக்கு, மேற்செலா - மேலே
செல்லும்படி, துட்டமா துரந்தனன் - தனது கொடிய குதிரையை வானத்தே செலுத்தினான்,
மட்டுவார்ந்த மாலையான் - தேன் பொழியும் மாலையணிந்த சிறீசேனன், என்பான்,
(எ - று.)

     சிறீபாலன் தனது வாளைத் துகளாக்கியவுடன் சிறீசேனன் தன் குதிரையைச் சிறீபாலன்
குதிரைக்கு மேலே செல்லும்படி செலுத்தினான் என்க. துஷ்டமா - துட்டமா என நின்றது.
 

(243)

 
1374. மாதி போகு மானமா
மீது போக விட்டவன்
சோதி 4கூடு சுடர்முடிக்
கேத மாக வெண்ணினான்.
 
     (இ - ள்.) மாதிபோகும் மானமா - மண்டலமாக ஓடுகின்ற வலிய குதிரையை, மீது
போகவிட்டவன் - உயரச் செல்லும்படி செலுத்திய சிறீசேனனுடைய, சோதிகூடு சுடர்முடிக்கு
- மிக்க சுடருடைய முடிக்கலன் அணிந்த தலைக்கு, ஏதம் ஆக - கேடு உண்டாக என,
எண்ணினான் - சிறீபாலன் கருதினான், (எ - று.)

     மாதி - குதிரையின் நடைவகையுள் ஒன்று. சுடர்முடிக்கு ஏதமாக எண்ணுதலாவது:-
தலையை அரிய வேண்டும் என்று கருதுதல் என்க.

(244)

1375 எண்ணி னன்னெ டுப்பலும்
5கண்ணி யஃது கருதிமா
 

     (பாடம்) 1 வாள. 2 மேற்செலத். 3 மாக்கடாவினான். 1 கூட்டு நீண்முடிக், கூடுநீண்முடி. 2 கண்ணிய துணர்ந்தமா.