பக்கம் : 865 | | வியப்புடைத்து, என - என்று கூறி, அலர நக்கனன் - பெருகச் சிரித்தான், கதிர் விடுவளை யெயிறு உடைய காளையே - சுடருகின்ற கோரப் பற்களையுடைய கனகசித்திரன், (எ - று.) விதிபடு மனிசர் - விச்சாதரருக்குத் திறைகொடுத்து அவருடைய ஆணையிலே அடங்கி வாழும் மனிதர் என்க. நக்கனன் என்றதற்கேற்பக் கதிர்விடு வளை யெயிறுடைய காளை என்றார். நமது ஆணைக்கடங்கி அஞ்சிவாழும் மனிசரை யாம் அஞ்சுதல் புலி புல்வாய்க் கஞ்சினாற்போன்றதொரு வியப்புடைத்தென்பான். அதிசயம் இது என்றான் என்க. | (251) | | இதுவுமது | 1382. | உடைந்தவர் மனங்களை யுருவ வீழ்த்திடு மடந்தையர் வடிக்கணம் பல்ல வாய்விடின் மிடைந்தவர் தொடங்கிய வீரக் 1கோட்டியுள் அடைந்தவ ரடுபடைக் கஞ்சல் வேண்டுமோ. | (இ - ள்.) உடைந்தவர் மனங்களை - போரிற் புறமிட்டு ஓடிய ஆண்மையில்லாதோரின் நெஞ்சுகளை, உருவ - ஊடுருவிப் போம்படி, வீழ்த்திடும் - தைத்து வீழ்த்துவனவாகிய, மடந்தையர் - பெண்டிர்களின், வடிக்கண் அம்பு அல்ல ஆய்விடின் - இகழ்ந்து நோக்கும் வடிக்கப்பட்ட அக்கண்ணம்பு கட்கன்றி, மிடைந்தவர் தொடங்கிய வீரக்கோட்டியுள் - செறிந்தவராய்ப் போர் தொடங்கிய மறவர் கூட்டத்தே, அடைந்தவர் - போர் செய்யச் சென்ற மறவர்கள், அடுபடைக்கு - கொல் கருவிகட்கு, அஞ்சல் வேண்டுமோ - அஞ்சுவதும் தகுமோ, (எ - று.) வீரர்கள், புறமிட்டோடிய தம்மைத் தம் பெண்டிர் இகழ்ந்து நோக்கும் கண்ணம்புகட்கே அஞ்சவேண்டுமன்றிப் பகைவர் விடும் அம்புக்கு அஞ்சுதல் நாணுடைத் தென்றான், என்க. | (252) | | இதுவுமது | 1383. | தானுடம் 2பிறந்ததற் பின்னுந் தன்றிறல் வானுடன் புகழ்தர நிற்கு மண்மிசை மானுட ருயிர்கொள மான மில்லிர்காள் ஊனுடம் பிதன்பொருட் டுடையல் வேண்டுமோ. |
| (பாடம்) 1 கோடியுள். 2 பிழந்ததற். | | |
|
|