பக்கம் : 866 | | (இ - ள்.) தான் உடம்பு இறந்ததன் பின்னும் - ஒருவன் தன்னுடல் நீத்திறந்த பின்னரும், தன்திறல் - தனது ஆண்மை, வானுடன் புகழ்தர - தேவர் உலகத்தோடே புகழையும் ஒருங்கே தந்து, நிற்கும் - என்றும் நிலைத்து நிற்பதாம், மண்மிசை மானுடர் உயிர்கொள - நிலத்தில் வாழும் எளிய மனிதர்கள் உங்கள் உயிர்களைக் கொள்ளாநிற்ப; மானமில்லிர்காள் - மானங்கெட்டவர்களே, ஊனுடம்பு இதன் பொருட்டு - அழிதன் மாலைத்தாகிய ஊனாலாய இவ்வெளிய உடலை ஓம்பும்பொருட்டு, உடையல் வேண்டுமோ - புறங்கொடுத்து ஓடவும் வேண்டுமோ, (எ - று.) அழிதன் மாலைத்தாகிய ஊனுடலைவிட்டும் நிலைத்து நிற்கும் புகழை ஓம்புதலே மறவர்க்கு மாண்பாம். மானங்கெட்டவர்களே! கணப்போதிற்றானே மாய்ந்தழியும் இவ்வூனுடம்பை ஓம்பவோ இங்ஙனம் உடைந்தோடுகின்றீர் என்றான் என்க. | (253) | | இதுவுமது | 1384. | நெய்யினா னிழன்றுநீர் நின்ற நீளொளி வெய்யவா ளமரிடை வெருவி யிட்டதங் கையினாற் கருனையின் கவளங் கொள்ளிய ஐயன்மார் போந்ததென் றசதி 1யாடினான். | (இ - ள்.) நெய்யினால் நிழன்று நீர் நின்ற நீள்ஒளி வெய்ய வாள் அமரிடை - நெய்பூசுதலாலே விளங்கி மறத்தன்மை நிற்றற்குக் காரணமான தன்மையுடைய நீண்ட ஒளிக்கதிர்காலும் வெவ்விய வாளால் ஆற்றப்படும் போர்த்தொழிலில், வெருவியிட்ட தம் கையினால் - அஞ்சித் தம் படைக்கலன்களை எறிந்துவிட்ட தம்முடைய திருக்கைகளாலே, கருனையின் கவளம் கொள்ளிய - மனைவியர் உவந்தூட்டும் பொரிக்கறியோடு கூடிய உண்டியை ஏந்தி உண்ணவோ, ஐயன்மார் போந்தது - சிறந்த தலைவர்கள் இங்கு வந்தது, என்று அசதியாடினான் - என்றுகூறி இகழ்ந்தான், (எ - று.) அசதியாடல் - பரிகசித்தல். படைத்தலைமை சான்ற பெரியீர்! பகையஞ்சி வாள் முதலியவற்றை விட்டெறிந்த இத்திருக் கைகளால், பொரிக்கறிக்கவளம் நுங்காதலிமார் தர அவற்றை ஏந்தி உண்ணவோ இவ்வாறு நீயிர் ஓடிவருகின்றீர் என்றான் என்க. ஐயன்மார் என்றது இகழ்ச்சி. | (254) |
| (பாடம்) 1 சொல்லினான். | | |
|
|