பக்கம் : 869
 

அவ்வாறு தோன்றிய கனகசித்திரன் குதிரைகளைத் துணிபடத் துணித்தும் தேர்களைச்
சிதைத்தும் களிறுகளை மாய்த்தும் போர்வெறி தீர்ந்தானில்லை என்க.

 (258)
இதுவுமது
1389. வார்குலாங் 1கருங்கழன் மன்ன ரேற்றவர்
நீர்குலாங் குருதியுட் குளிப்ப நேரினி
யார்கொலேற் பவரென வஞ்ச வெஞ்சினக்
கார்குலா முருமெனக் காளை தோன்றினான்.
 
     (இ - ள்.) ஏற்றவர் - கனகசித்திரனைப் போரில் எதிர்த்தோரனைவரும், நீர்குலாம்
குருதியுட்குளிப்ப - நீர்போல இயங்குகின்ற குருதியிலே முழுகிப்போக, வார்குலாம்
கருங்கழல் மன்னர் - வாரின்கண்ணே பொருந்திய கரிய வீரக்கழலையுடைய அரசர்
எல்லாம், இனி நேர் யார்கொல் ஏற்பவர் என அஞ்ச - இனி, கனகசித்திரன் எதிர்சென்று
போர் ஏற்கும் ஆற்றலுடையார் யாரே உளர் என்று அஞ்சாநிற்ப, கார்குலாம் வெஞ்சின
உரும் என - முகிலின்கட்டோன்றும் வெவ்விய சினமுடைய இடியேறு போன்று, காளை
தோன்றினான் - கனகசித்திரன் தோன்றுவானாயினன்,
(எ - று,)

     போர் வெறி தீராதவனாய், ஏற்றவர் குருதியுட் குளிப்பவும், அஞ்சவும் உருமெனத்
தோன்றினான் என்க.

(259)

 
அச்சுவகண்டன் தம்பியர் போர்க் கெழுதல்
1390. காளைநங் கனைகழற் கனக சித்திரன்
வாளம ரழுவத்து மண்டி னானெனக்
கேளவர் மொழிதலுங் கிரீவன் றம்பிமார்
ஆளிவர் கடற்படை யனன்றெ ழுந்ததே.
 
     இ - ள்.) காளை - காளைபோல்வானாகிய, நம் கனகசித்திரன் - நம்முடைய
கனகசித்திரன், வாள் அமர் அழுவத்து - வாட்போர் செய்யும் போர்க்களத்தே, மண்டினான்
என - சென்றான் என்று, கேளவர் - தூதர்கள், மொழிதலும் - கூறியவுடனே, கிரீவன் -
அச்சுவகண்டனுடைய, தம்பிமார் - தம்பியர் நால்வருடைய, ஆளிவர் கடற்படை -
மறவர்கள் இயங்காநின்ற கடல் போன்ற பெரியபடை, அனன்று - வெகுண்டு, எழுந்ததே -
போர் செய்யப் புறப்பட்டது.

     (பாடம்) 1 கருங்குழன்.