பக்கம் : 872
 
 
1395. முரிந்தன மணிநெடுந் 1தேர்கண் முத்துக
நெரிந்தன களிறுடை மருப்பு நேர்முகம்
சரிந்தன தலைபல 2தறுக ணில்லவர்
இரிந்தன ரிழிந்தது குருதி நீத்தமே.
 
     (இ - ள்.) மணி நெடுந்தேர்கள் முரிந்தன - மணிகள் அழுத்தப்பட்ட நெடிய தேர்கள்
ஒடிந்தன, களிறுடை மருப்பு முத்து உக நெரிந்தன - யானைகளின் கோடுகள் முத்துக்கள்
சிதறும்படி நெரிவுற்றன, நேர்முகம் தலைபல சரிந்தன - எதிர்ப்பக்கத்தே பல தலைகள்
சரிந்து வீழ்ந்தன, தறுகண் இல்லவர் இழிந்தனர் - வீரமில்லாதார் பலர் புறமிட்டோடினர்,
குருதி நீத்தம் இழிந்தது - அவ்வழி எங்கும் செந்நீர் வெள்ளம் ஓடலாயிற்று, (எ - று.)

     தேர்கள் முரிந்தன, களிறுகள் மருப்பு நெரிந்தன, தலைகள் சரிந்தன, வீரமில்லாதவர்
புறமிட்டோடினர், யாண்டும் குருதிவெள்ளம் பெருகி ஓடிற்றென்க. யானைக் கொம்புகளில்
முத்துக்கள் தோன்றுதல் உண்மையின் முத்துக நெரிந்தன மருப்பு என்றார்.

 (265)

 
1396. மரைமயி ரணிந்தன மான 3மாப்பல
திரையென வுருண்டன திலத வெண்குடை
நுரையென நிவந்தன நுந்து மப்புனற்
கரையெனக் கிடந்தன களிற்றின் 4கூவையே.
 
     (இ - ள்.) மரைமயிர் அணிந்தன மானம் மாபல - கவரிமானின் மயிராலே ஒப்பனை
செய்யப்பட்ட பெருமை மிக்க பல குதிரைகள், திரையென - கடலின் அலைபோன்று,
உருண்டன - போர்க்களத்தே உருளலாயின, திலத வெண்குடை - சிறந்த
வெள்ளைக்குடைகள், நுரையென நிவந்தன - அக்கடலிடத்தே நுரைகளைப்போன்று
மிதந்தன, நுந்தும் அப்புனல் - ஈர்த்துச் செல்லும் அக்கடலுக்குரிய, கரையென -
கரையைப்போன்று, களிற்றின் கூவை கிடந்தன - யானைக் கூட்டங்கள் மாண்டு கிடந்தன,
(எ - று.)

     அப்போர்க்களத்தே குதிரைகள் கடலின் அலைபோன்று உருண்டன. குடைகள்
நுரைகளைப் போன்று மிதந்தன, அக்குருதிக் கடற்கமைந்த கரையைப் போன்று
யானைப்பிணங்கள் கிடந்தன என்க.

 (266)

 
1397. பெருகிய குருதியுட் பிறங்கு செந்தடி
அருகுடை யளற்றினு ளழுந்திப் பாகமே
 

    (பாடம்) 1தோள்கண். 2தம்மையில்லவர். 3மாயலைத். 4குப்பையே.