பக்கம் : 873 | | | சொரிகதிர்க் கோடக முடிக டோன்றலால் பொருகளம் புற்றெடுக் கின்ற 1போலுமே. | (இ - ள்.) பெருகிய குருதியுள் - பெருக்கெடுத்தோடும் குருதி வெள்ளத்தே, பிறங்கு செந்தடி - விளங்குகின்ற செவ்விய ஊனாகிய, அருகுடை - பக்கத்தே உளதாகிய, அளற்றினுள் - சேற்றிடத்தே, பாகமே அழுந்தி - ஒரு பகுதி மாத்திரையே புதையுண்டு, சொரிகதிர் கோடக முடிகள் தோன்றலால் - பொழிகின்ற ஒளியை உடைய கோடகமாகச் செய்யப்பட்ட முடிகள் காணப்படுதல் உண்மையின், பொருகளம் - அப்போர்க்களமானது, புற்று எடுக்கின்ற போலும் - புற்றுக்களைத் தன்பால் தோற்றுவனபோலத் தோன்றா நிற்கும், (எ - று.) கோடகமுடியின் ஒரு பகுதி புதையுண்டு ஒருபகுதி மேலே தோன்றுதல், புற்றுக்கள் தோன்றுவன போன்று காணப்பட்டன என்பதாம். கோடகமுடி - ஐந்துவகை முடிக்கலன்களுள் ஒன்று. அவையாவன:- தாமமுடி, முகுடமுடி, பதுமமுடி, கோடகமுடி, கிம்புரிமுடி என்பன. இவற்றுள் கோடகமுடி சிகரவடிவிற்று ஆகலின் புற்று உவமையாயிற்று என்க. | (267) | 1398. | மாடடைந் தெதிர்ந்துதம் வயிரத் 2தண்டினாற் பீடடைந் தவர்பிடர் புடைப்ப வானையின் கோடுடைந் துதிர்ந்தன கொடுமுட் கேதகைத் தோடுடைந் தொருவழித் 3தொகுத லொத்தவே. | இ - ள்.) மாடு அடைந்து - தம் பக்கலிலே எய்தி, பீடு அடைந்தவர் - மறமாண்புடையோர், தம் வயிரத்தண்டினால் - தமது வயிரமணியாலியன்ற தடியாலே, பிடர்புடைப்ப - தம் எருத்திலே தாக்க, ஆனையின் - யானைகளின், உடைந்து உதிர்ந்தன கோடு - நுறுங்கி உதிர்ந்த கொம்புகள், கொடுமுள் - வளைந்த முட்களையுடைய, கேதகை - வெள்ளைத்தாழை மலர்களின், தோடுடைந்து - இதழ்கள் சிதறி, ஒருவழி - ஓரிடத்தே, தொகுதல் - குவிதலை, ஒத்தவே - ஒத்திருந்தன, (எ - று.) வீரர்கள் வயிரத் தண்டாலே மோதினமையால் நுறுங்கி உதிர்ந்த யானைமருப்புக்கள் வெண்டாழை மலர்த்தோடு சிதறிக் குவிந்ததை ஒத்திருந்தன என்பதாம். | (268) | | 1399. | குழைசுடர்ந் திலங்குதா ரரசர் கோலமாண் இழைசுடர் தோள்களா லெறிய யானையின் |
| (பாடம்) 1தொக்குமே. 2தண்டினாம். 3தொகுத்த. | | |
|
|