பக்கம் : 877
 
 
  நெய்வரை நீணிலத் தலத்து மேற்பல
மொய்வரை முனையடிப் புண்ட வொத்தவே.
 
     (இ - ள்.) கைவரை ஒழுகிய - கையிடத்திருந்து விடுபட்ட, கணையம் பாய்ந்து
எறிதடிகள் புகுந்து, தம் மெய்வரை - தம்முடைய உடலெங்கும், நிரைத்திட -
நிரம்புதலானே, வீழ்ந்த யானைகள் - மாண்டுவீழ்ந்த யானைகள், நெய்வரை நீணிலத்
தலத்துமேல் - ஊனாகிய நெய்ப்புடைய நீண்ட போர்க்களத்தின் மேலே, பல - பலவாகிய,
மொய்வரைமுனை - செறிந்த மலைச்சிகரங்கள், அடிப்புண்ட - புதைக்கப்பட்டன போன்றன,
(எ - று.)

     போர்க்களத்தில் கணையம் பாய்ந்து இறந்து வீழ்ந்த யானைகள் மலைச்சிகரங்கள்
புதைபட்டுச் சிறிதே தோன்றுவன போன்றன. முனை அடிப்புண்ட - முனைவரையிற்
புதையுண்ட என்க.

(275)

 
1406. ஊடக 1மொளிர்மணி நாகங் கவ்விய
நாடக விரிமதி நடுங்கி வீழ்வபோல்
ஆடக மணி2யவிர் கடகக் கையொடு
கேடகந் திசைதிசை கிளர்ந்து வீழ்ந்தவே.
 
     (இ - ள்.) ஊடும் அகம் ஒளிர்மணி நாகம் கவ்விய - அகத்துள்ளும் ஒளிர்கின்ற
மணியையுடைய பாம்பினாலே கவ்வப்பட்ட, நாள்தக விரிமதி - பூரணை - நாளுக்குப்
பொருந்த முழுதும் விரிந்த முழுத்திங்கள், நடுங்கி வீழ்வபோல் - நடுக்கமுற்று
வீழ்வதைப்போன்று, ஆடகம்மணி அவிர்கடகக் கையொடு - பொன்னாலும் மணியாலும்
விளங்குகின்ற கடகம் செறித்த கையோடே, கேடகம் - கிடுகுகள், திசைதிசை -
திக்குகடோறும், கிளர்ந்து - ஒளி பரப்பிக்கொண்டு, வீழ்ந்தவே - வீழலாயின, (எ - று.)

     அற்ற கையுடன் கிடுகுப் படைகள் வீழ்வன, கவ்விய பாம்போடே வீழும் திங்களை
ஒத்தன என்க.

(276)

 

1407.

துளைப்படு புண்ணுமிழ் 3சோரி பாய்ந்தெழக்
களிப்படு சிலம்பின கவந்த மாடுவ
முளைப்புடை முடைத்திடை சுடர மூட்டிய
விளக்கிடு 4குற்றியின் விரிந்து தோன்றுமே.
 
     (இ - ள்.) துளைப்படு புண்உமிழ் - படைகள் பாய்ந்த துளைகளையுடைய புண்கள்
காலுகின்ற, சோரி - குருதி, பாய்ந்து எழ - பொங்கி எழாநிற்ப, களிப்படு சிலம்பின -
களித்து ஆரவாரமுடையனவாய்,
 

     (பாடம்) 1மெரிமணி. 2நகை. 3குருதி. 4குறியின.