பக்கம் : 878 | | கவந்தம் ஆடுவ - குறைப்பிணங்கள் ஆடுகின்ற காட்சி, முளைப்பு உடைமுடைத்திடை - தோன்றுதலையுடைய ஊன் குவியலாகிய திடரின்மேல், சுடரமூட்டிய - ஒளிரும்படி கொளுத்திய, விளக்கிடு குற்றியின் - விளக்குகள் வைக்கப்பட்ட தண்டுகள் போன்று, விரிந்து தோன்றுமே - தலையிடத்தே விரிவுடையனவாய்க் காணப்படும், (எ - று.) முடை - ஊன் - திடை - திட்டை : விகாரம்; திடர். குருதி பொங்க நின்று ஆடும் குறைத்தலைப் பிணங்கள், விளக்குத் தண்டுபோல் தோன்றின என்க. | (277) | | விசயன் போர் மாண்பு | 1408. | அஞ்சல ரமர்க்கள மென்னு மார்வயல் விஞ்சையர் குருதிநீர் வெள்ளந் 1தேர்த்தெழ வெஞ்சின நாஞ்சிலா லுழுது வெள்ளியான் தஞ்சமார் தன்புகழ் தயங்க வித்தினான். | (இ - ள்.) அஞ்சலர் - பகைவர்களுடைய, அமர்க்களம் என்னும் - போர்க்களம் என்கிற, ஆர்வயல் - பொருந்திய வயலிடத்தே, விஞ்சையர் குருதிநீர் வெள்ளம் தேர்த்து எழ - விச்சாதரருடைய குருதியாகிய நீர்ப்பெருக்குத் தேங்கிப் பெருகாநிற்ப, வெஞ்சின நாஞ்சிலால் உழுது - தனது வெவ்விய சினமுடைய கலப்பைப்படையாலே பலசால் உழுதலைச்செய்து, வெள்ளியான் - விசயன் என்பான், தஞ்சம்ஆர் தன்புகழ் - பிறர் தஞ்சம் புகுதற்குக் காரணமான தன் புகழாகிய வித்தை, தயங்க வித்தினான் - விளங்கும்படி விதைத்தான், (எ - று.) விசயன், பகைவருடைய போர்க்களமாகிய வயலிலே விச்சாதரருடைய குருதிநீரைப் பாய்ச்சித் தனது கலப்பையாலே உழுது புகழாகிய விதையை வித்தினான் என்க. | (278) | | அச்சுவகண்டன் தம்பியர் ஈண்டுப் போர்செய்வான் யாவன் எனல் | 1409. | வெளியவன் 2மிளிர்மரை புரையுஞ் செங்கணான் 3அளியின னமர்க்களங் கடாக்கொள் கின்றவவ் விளையவன் யாரென வினவிக் கேட்டனர் கிளையமர் கிரீவனுக் கிளைய வீரரே. | |
| (பாடம்) 1தொத்தெழ. 2றாமரை. 3அளியில. சூ. -56 | | |
|
|