பக்கம் : 879 | | (இ - ள்.) வெளியன் - வெள்ளைநிறம் உடையானும், மிளிர்மரை புரையும் செங்கணான் - திகழ்கின்ற செந்தாமரை மலரை ஒத்த சிவந்த கண்களை உடையானும், அளியினன் - நம்மால் இரங்கத்தக்கானும், அமர்க்களம் கடாக்கொள்கின்ற, போர்க்களத்தே 5கடாவிடுகின்றவனும் ஆகிய, அவ் விளையவன் யார் - அந்த இளமை மிக்கோன் யாவனோ, என வினவிக் கேட்டனர் - என்று வினவினார், கிளை அமர் - சுற்றத்தாரை விரும்புகின்ற, கிரீவனுக்கு இளையவீரர் - அச்சுவகண்டனுக்குத் தம்பியர் ஆயினோர், (எ - று.) கடாவிடுதல் - துவைத்தல். வெள்ளை நிறமுடையவனும் செங்கணானும் நம் இரக்கத்திற்குரியவனும் பெரும்போர் ஆற்றுபவனுமாகிய இவன் யாரென அச்சுவகண்டன் தம்பியர் விசயனைச் சுட்டித் தம் மயலோரை வினவினர் என்க. அளியினன், என்றார் தம்மாற் கொலையுண்பான் என்பது தோன்ற. விசயன் எனக் கேட்டலும் நால்வரும் ஒருங்கே வருதல் | | (279) | 1410. | சுரமைய ரதிபதி 1தோமின் மாக்களுள் பெரியவ னிவனெனப் 2பிறந்த செற்றமோ டெரியவிர் 3வெகுளியா ரிளைய 4காளையிங் கொருவன்மே னால்வரும் யானை யோட்டினார். | (இ - ள்.) சுரமையர் அதிபதி - சுரமைநாட்டினரின் மன்னனாகிய பயாபதியினுடைய, தோம் இல் மாக்களுள் - குற்றமற்ற மக்கள் இருவருள்ளே; பெரியவன் இவன் - மூத்தமகன் விசயன் என்பானே இவன், என - என்று அறிந்தோர்கூற, பிறந்தசெற்றமோடு - எழுந்த பகையினோடே, எரிஅவிர் வெகுளியார் - தீக்காலும் சினமுடையராய், இங்கு - இவ்விடத்தே, ஒருவன் மேல் - இளவிசயன் ஒருத்தன்மேல், இளைய காளை நால்வரும் - நீலகண்டன் முதலிய நான்கு தம்பிமார்களும். யானை ஓட்டினார் - தத்தம் யானையைச் செலுத்தினார், (எ - று.) மாக்கள் - மக்கள் என்னும் முறைப்பெயர் முதனீண்டது. அவ்வாறு வினவியவர் இவன் விசயன் என அறிந்தவுடன் நால்வரும் ஒருங்கே தத்தம் யானைகளை விசயன்மேல் வெகுண்டு செலுத்தினர் என்க. | (280) | | விசயனை அந்நால்வரும் வளைத்துக் கோடல் | 1411 | இரத்தின கண்டனு மேனை வீரரும் வரைத்தனர் வருபடை வீதி வாயெலாம் எரித்தனர் நால்வரு மிளைய காளையை முரித்திடு முனிவின ராகி முற்றினார். | |
| (பாடம்) 1சிறுவன்மார்களுள். 2பிறழ்ந்த. 3வெகுளிய. 4காளையர். | | |
|
|