பக்கம் : 881 | | | அரியர சடைந்ததொன் றதனை யேறினான் புரிவகை நாஞ்சிலும் புதிய தெய்தினான். | (இ - ள்.) எரிபுரை உளைகளோடு - தீப்பிழம்பை ஒத்த பிடரிமயிர்க்கற்றையுடனே, இலங்கு வெண்பிறை - திகழ்கின்ற வெள்ளிய இளம்பிறை, விரிவன என - நிலாப்பரப்புதலைப் போன்று, விளங்கு - திகழ்கின்ற, எயிற்றொடு - பற்களுடனே, ஆயிடை - அப்பொழுது, அரியரசுஒன்று அடைந்தது - ஓர் அரசசிங்கம் விசயனை எய்திற்று, அதனை ஏறினான் - தெய்வத்தன்மையால் வந்த அச்சிங்கத்தின் முதுகில் விசயன் ஏறி அமர்ந்தானாக, புரிவகை - மேலும் தான் விரும்பியபடியே, நாஞ்சிலும் - கலப்பைப் படையும், புதியது எய்தினான் - புதுவதாக ஒன்று தன் கையில் வந்தெய்தப்பெற்றான், (எ - று.) அப்பொழுது, ஓர் அரிமாவும் கலப்பைப் படையும் விசயனை அடைந்தன, அரிமாவினை ஏறி நாஞ்சிலைக் கைக்கொண்டான் என்க. (283) | (284) | | விசயன் படைஞர் ஆரவாரித்தல் | 1414. | 1தெய்வவாய் நாஞ்சிலுஞ் செங்கட் சீயமும் ஐயனாங் கெய்தலு மதிர வார்த்தது வையமா விளையவன் றானை 2மாற்றலர் மையன்மா யானைகண் மயங்கி யிட்டவே. | (இ - ள்.) தெய்வம் வாய்நாஞ்சிலும் - தெய்வத்தன்மையுடைய கூர்வாயமைந்த கலப்பைப்படையும், செங்கண்சீயமும் - சிவந்த கண்களையுடைய அரிமாவும், ஐயன் - தலைவனாகிய விசயன், எய்தலும் - அடைந்தவுடனே, அதிர ஆர்த்தது - உலகம் அதிரும்படி முழங்கிற்று, ஆங்கு - அப்பொழுதே, வையம் ஆள் இளையவன் தானை - உலகினை ஆளுகின்ற விசயனுடைய படை, மாற்றலர் - பகைவர்களுடைய, மையல்மா யானைகள் - மதமயக்குடைய யானைகள் எல்லாம், மயங்கி இட்டஏ - மயக்கமுற்றன, (எ - று.) நாஞ்சிலையும் அரிமாவினையும் விசயன் எய்தியவுடன் அவன் படை உலகதிரும்படி ஆரவாரித்தது. மாற்றலர்படையிலுள்ள யானைகள் மயங்கின என்க. | (284) | விசயனின் நாஞ்சிற் போர் | 1415 | பொருபடை புகைந்தவர் வழங்கு மாயிடைச் செருவுடை யவரகன் செல்வ மார்பகம் | (பாடம்) 1செய்யவாய். 2மற்றவர் | | |
|
|