பக்கம் : 882
 
  உருவுடை நாஞ்சிலா லுழுதிட் டானரோ
மருவுடை 1யவர்தமை மயக்கு மைந்தனே.
 
     (இ - ள்.) புகைந்தவர் - பகைவர்கள், பொருபடை - போர்ப் படைகளை, வழங்கும்
ஆயிடை - வீசத்தொடங்கியவுடன், செரு உடையவர் - போர்த்தொழிலையுடைய
அப்பகைப்படைஞருடைய, அகன்செல்வ மார்புஅகம் - அகன்ற செல்வச் சிறப்புடைய
மார்பிடமாகிய வயல்களை, உருஉடை நாஞ்சிலால் - அழகிய தன் கலப்பைப் படையாலே,
உழுதிட்டான் - உழுதான், மருவுடையவர் தமை - தன்பால் மருவுதலுடைய நண்பரை,
மயக்கும் - மயக்குறுத்தும், மைந்தனே - பேரன்புடைய விசயன், (எ - று.)

     பகைவர்கள் போர் தொடங்கியவுடன் விசயன் தன் கலப்பைப் படையால் அவருடைய
மார்புகளைப் பிளந்தான் என்க.

(285)

 

மணிகண்டன் முதலிய நால்வருடனும் கனகசித்திரன்
வந்து கூடுதல்

1416. ஒருவனோர் நாஞ்சிலா லூழித் தீப்புரை
இருவரோ டிருவரை யானை2 நான்கொடு
செருவினு ளமர்வெலக் கேட்டுச் சேர்ந்தனன்
கருவரை யனையதோட் 3கனக காமனே.
 
     (இ - ள்.) ஒருவன் ஓர் நாஞ்சிலால் - மறவனும் ஒரோ ஒருத்தன், அவன் படையும்
ஒரோஓர் கலப்பை, அக்கலப்பையாலே, ஊழித் தீப்புரை - ஊழிக்காலத்துப் பெருந்தீயையே
ஒத்த, இருவரோடு இருவரை - தன் சிறு தந்தையராகிய நீலகண்டன் முதலிய நால்வரையும்,
யானை நான்கொடு - அவர்கள் ஊர்ந்துசென்ற நான்கு யானைகளோடும், செருவினுள் -
போர்க்களத்தே, அமர் வெலக்கேட்டு - போர்த்தொழில் செய்து வென்றான் எனக்கண்டோர்
கூறக்கேட்டு, சேர்ந்தனன் - வந்து அவர்கட்குத் துணையாய் எய்தினான், கருவரை அனைய
தோள் கனககாமன் - அவன் யாரெனில் கரிய மலைபோலும் தோள்களையுடைய
கனகசித்திரன் என்னும் காமவேளை ஒப்பான், (எ - று.)

     தன் இளந்தந்தையர் விசயன்முன் ஆற்றாது வீழ்ந்தமை கண்டு கனக சித்திரன் வந்து
எதிர்ந்தான் என்க.

 (286)

 
கனகசித்திரனைக் கோறல்
1417 காளையக் கனகசித் திரனுங் காய்ந்துதன்
வாளைவாய் துடைத்தெதிர் மடுப்ப மற்றவன்
 

     (பாடம்) 1 யவரையும். 2யாண. 3கனகநாமனே.