பக்கம் : 883
 
  தோளையுஞ் சுடர்கெழு நாஞ்சில் வாயினால்
ஆளியே றனையவ னழுந்த வூன்றினான்.
 
     (இ - ள்.) காளை - காளைபோன்ற, அக்கனகசித்திரனும் - அந்தக் கனகசித்திரன்
என்பானும், காய்ந்து - மிகச் சினங்கொண்டு, தன்வாளை வாய் துடைத்து - தனது
வாளினது வாயைக் கையாலே துடைத்து, எதிர் மடுப்ப - விசயனை எதிர்த்துத் தடுத்திட,
மற்றவன் - அக்கனகசித்திரனுடைய, தோளையும் - தோளிடத்தேயும், சுடர்கெழு நாஞ்சில்
வாயினால் - ஒளி திணிந்த கலப்பை நுனியாலே, ஆளிஏறு அனையவன் - அரிமா ஏற்றை
ஒத்த விசயன், அழுந்த - ஊடுருவும்படி, ஊன்றினான் - பாய்ச்சினான், (எ-று.)

     அவ்வாறு வந்துகூடிய கனகசித்திரன் சினந்து தன் வாளையுருவித் துடைத்தனனாக,
அப்பொழுதே விசயன் கலப்பையை அவன் தோளிடத்தே ஊன்றிக் கொன்றான் என்க.

(287)

 

மணிகண்டன் நிற்க ஏனைய நால்வரும் மாய்தல்

1418. வனைகதி ரிலங்குதோள் வயிர கண்டனோ
டனைவரு மலாயுதற் கமர்தொ லைந்ததும்
கனகசித் திரனது பாடுங் 1கண்டரோ
அனல்2படு மனத்தனங் கொருவ னாயினான்.
 
     (இ - ள்.) வனைகதிர் இலங்குதோள் - புனைந்த அணிகலன்களின் ஒளிதிகழ்கின்ற
தோளையுடைய, வயிரகண்டனோடு - வயிரகண்டன் என்பானோடு, அனைவரும் -
ஏனையோர் அனைவரும், அலாயுதற்கு - விசயனுக்கு, அமர் தொலைந்ததும் - போர்
செய்ய ஆற்றாது இறந்து தீர்ந்தமையும், கனகசித்திரனது பாடும் கண்டு - கனக சித்திரன்
மாண்டமையும், கண்கூடாக் கண்டு, அங்கு ஒருவன் - அவ்விடத்தே எஞ்சிய மணிகண்டன்
என்பான், அனல் படு மனத்தன் ஆயினான் - சினத்தீயாற் றீய்க்கப்பட்ட
நெஞ்சமுடையவன் ஆயினான், (எ - று.)

     அச்சுவகண்டன் தம்பியருள் மூத்தவனாகிய மணிகண்டன் நிற்க ஏனையோரும்
கனகசித்திரனும் மாண்டமை கண்டு மணிகண்டன் மிக்க சினமுடையன் ஆனான் என்க.
 

(288)

 
மணிகண்டன் ஒரு மலையினைப் பெயர்த்து வருதல்
1419 பொடித்தலை நிலத்தவர் 3போரு மாண்மையு
முடித்திடு கெனமுனிந் தெழுந்து மூரிவா
 

     (பாடம்) 1கேட்டரோ. 2கெழு. 3பொருது.