பக்கம் : 884
 
 
  மடுத்ததோர் வரைதனை வயிரக் கைகளால்
எடுத்தன னிரத்தின கிரீவ னென்பவே.
 
     (இ - ள்.) இரத்தினகிரீவன் - அந்த மணிகண்டன் என்பான், பொடித்தலை நிலத்தவர்
- மணல்பரந்த இடத்தையுடைய சுரமைநாட்டினரின், போரும் - போர்த்தொழிலையும்,
ஆண்மையும் - அவர்தம் மறத்தன்மையையும், முடித்திடுகு என - இப்பொழுதே
அழித்தொழிப்பேன் என்று சூள்மொழிந்து, முனிந்து எழுந்து - வெகுண்டுபோய்,
வான்மடுத்தது ஓர் மூரிவரை தனை - பெரிய விசும்பினை அளாவிய ஒரு பெரிய மலையை,
வயிரக்கைகளால் - தனது உறுதியுடைய கைகளாலே, எடுத்தனன் என்ப - தூக்கினான்
என்று அறிஞர் கூறுவர், (எ - று.)

     சினமிக்க மணிகண்டன் பகைவர் படைமுழுதும் ஒருங்கே அழிப்பேன் என்று கூறி
ஒரு பெரிய மலையைப் பெயர்த்துக் கொண்டெய்தினன் என்க.
 

(289)

 

விசயன் படை புறமிட்டு ஓடுதல்

1420. வரிந்துவீழ் கச்சையன் வனைந்த தாடியன்
முரிந்தெழு புருவத்தன் முழங்கு தீயென
எரிந்தன னிறுவரை யெடுத்து மேற்செல
விரிந்தது சுரமைய ரிறைவன் றானையே.
 
     (இ - ள்.) வரிந்து வீழ் கச்சையன், வரிந்துகட்டி ஒருபுறத்தே தொங்கவிடப்பட்ட
கச்சையுடையவனாய், வனைந்த தாடியன் - முறுக்கி மேலேற்றப்பட்ட மீசையை
உடையனாய், முரிந்துஎழு புருவத்தன் - வளைந்து நெற்றியில் ஏறிய
புருவங்களையுடையனாய், முழங்கு தீஎன எரிந்தனன் - ஒலிபட எரிகின்ற ஊழித் தீயைப்
போன்று சினத்தீக் கால்பவனாய், இறுவரை எடுத்து - அப்பெரிய மலையை
ஏந்திக்கொண்டு, மேற்செல - அம்மணிகண்டன் பகைவர் மேலே சென்றானாக, சுரமையர்
இறைவன் தானை இரிந்தது - பயாபதி மன்னன் படை முழுதும் அது கண்டு அஞ்சிப்
புறங்கொடுத்தோடிற்று. (எ - று.)

     மணிகண்டன் மலை பெயர்த்துத் தூக்கிவருதல் கண்ட சுரமை நாட்டினர்
படைமுழுதும் புறங் கொடுத்தோடிற் றென்க.

(290)

 
அருக்ககீர்த்தி மணிகண்டன்மேல் அம்பு விடுதல்
1421. ஆங்கவ னடைதலு மருக்க கீர்த்திகை
வாங்குவிற் புகுந்தது வாளி யொன்றவன்