பக்கம் : 885
 
  ஓங்கிருந் தூணியிற் சுடர்ந்த 1தொல்லெனத்
தாங்கருந் திறலவன் 2தாரித் தேவினான்.
 
     (இ - ள்.) ஆங்கு அவன் அடைதலும் - அவ்வாறு மணிகண்டன் எய்தியவுடனே,
அருக்ககீர்த்தி கை - அருக்ககீர்த்தியினுடைய இடக்கை, வாங்குவிற் புகுந்தது - தன்
வளைந்த வில்லிடத்தே சென்று பற்றியது, அவன் ஓங்கு இருந்தூணியிற் சுடர்ந்தது
வாளிஒன்று - அவ்வருக்ககீர்த்தியின் நீண்டுபருத்த அம்புப்புட்டிலின்கண் இருந்து
ஒளிபரப்பிய ஒரு கதிர் அம்பினை, தாங்கரும் திறலவன் - பகைவராற் றடுத்தற்கரிய
பேராற்றலுடைய அவ்வருக்ககீர்த்தி, ஒல்லென - விரைந்து, தாரித்து ஏவினான் -
வலக்கையில் எடுத்து எய்தான், (எ - று.)

     அந்நிலையினைக் கண்ட அருக்ககீர்த்தி தன் வில்லை வளைத்துச் சிறந்த
கணையொன்றைத் தொடுத்து மணிகண்டன்மேல் எய்தான் என்க.

(291)

மணிகண்டன் இறத்தல்

1422. தொடுத்ததுந் துரந்ததும் விடலை தோளிடை
மடுத்ததுங் கிழித்தது மண்ணி னுட்புகக்
கடுத்ததுங் கண்டுநின் றவர்க டம்மையும்
படுத்தது பகலவன் பகழி யென்பவே.
 
     (இ - ள்.) தொடுத்ததும் - அருக்ககீர்த்தி அவ்வம்பினை வில்லிலே தொடுத்ததையும்,
துரந்ததும் - அதனை ஏவியதையும், தோளிடை மடுத்ததும் - அது மணிகண்டன் தோளிற்
பாய்ந்ததையும், கிழித்ததும் - அத்தோளைப் பிளந்ததையும், மண்ணின் உட்புக - நிலத்தில்
ஊடுருவிச் செல்ல, கடுத்ததும் - மேலும் விரைந்ததையும், கண்டு நின்றவர்கடம்மையும் -
அயனின்று பார்த்திருந்தோரையும், படுத்தது - கொன்றொழித்தது, பகலவன் பகழி என்ப -
அவ்வருக்க கீர்த்தியின் அம்பு என்று - அறிந்தோர் உரைப்பர், (எ - று.)

     அவ்வம்பு, விடுத்ததையும் அது மணிகண்டன் தோள் துணித்ததையும் பின்னர்
மண்ணினுட்குளித்ததையும் கண்டு நின்ற பகைவரையும் கொன்றதென்க.

(292)

 
1423. வரையொடு வரையென 3மறிந்து மண்ணின்மேல்
விரையுடை யலங்கலான் வீழு மாயிடைத்
 

     (பாடம்) 1கொல்லெனத். 2சந்தித் தோட்டினான். 3மறித்து.