பக்கம் : 886 | | | திரையொடு கனைகடல் கலங்கிச் சிந்தின புரையுடை விலங்கலும் புலம்பு கொண்டவே. | (இ - ள்.) வரையொடு வரையென - தான் தூக்கிவந்த மலையோடே மற்றொரு மலைபோல, மண்ணின்மேல் மறிந்து - பூமியின் மேலே புரண்டு, விரையுடை அலங்கலான் - மணம் கமழும் மலர்மாலையணிந்த மணிகண்டன், வீழும் ஆயிடை - விழுந்த பொழுது, கனைகடல் - ஒலிமிக்க கடல்களும், திரையொடு கலங்கிச் சிந்தின - பெரிய அலைகளோடே குழம்பி நீரைச் சிதறாநின்றன, புரையுடை விலங்கலும் - குகைகளையுடைய மலைகளும், புலம்பு கொண்டவே - எதிர் ஒலி செய்து முழங்கலாயின, (எ - று.) அருக்ககீர்த்தியின் அம்பு பாய்ந்தவுடன் ஒரு மலையோடு மற்றொரு மலை வீழ்ந்தாற் போன்று மணிகண்டன் தான் சுமந்து வந்த மலையோடே மண்ணில் வீழ்ந்தான், அப்பொழுது கடல்கள் துளும்பிக் கலங்கின, மலைகள் எதிரொலி எடுத்தன என்க. | (293) | | மணிகண்டன் முதலியோர் மாண்டமை தூதர் அச்சுவகண்டனுக்குக் கூறல் | 1424. | தம்பியர் பாடு மக்க ளிறந்ததுந் தனக்குப் பாங்காய் வெம்பிய வீரர் போருள் விளிந்ததும் விரைவி னோடிச் செம்பினை யுருக்கி வெய்தாய்ச் செவிமுதற் சொரிந்த தேபோல் அம்பொன்செ யாழியானுக் குரைத்தன ரரக்குண் 1கோலார். | (இ - ள்.) அம்பொன் செய் ஆழியானுக்கு - அழகிய பொன்னாலியன்ற உருட்படையுடைய அச்சுவகண்டனுக்கு. அரக்கு உண் கோலார் - அரக்கூட்டிய கோலையுடைய தூதர்கள், விரைவின் ஓடி - விரைந்து ஓடிச்சென்று, செம்பினை வெய்தாய் உருக்கி - செம்பை மிக்க வெப்பமுடையதாக உருக்கி, செவி முதல் சொரிந்ததேபோல் - காதுகளிலே பெய்தாற்போலே, தம்பியர் பாடும் - மணிகண்டன் முதலிய நான்கு தம்பியரும் மாண்டமையும், மக்கள் இறந்ததும் - கனகசித்திரன் முதலிய தன் மக்கள் இறந்தமையும், தனக்குப் பாங்காய் - தனக்குத் துணையாகச் சென்ற, வெம்பியவீரர் - சினங்கொண்ட தன் மறவர் பலர், விளிந்ததும் - மாண்டமையும், உரைத்தனர் - எடுத்தியம்பினர், (எ - று.) | |
| (பாடம்) 1கோலோர். | | |
|
|