பக்கம் : 887
 

     அப்பொழுது மணிகண்டன் முதலிய தம்பிமார்களும் கனகசித்திரன் முதலிய மக்களும்
ஒருசேர மாண்டார் என்று அச்சுவகண்டனுக்குத் தூதர் உணர்த்தினர்; அத்தூதர் கூறிய
சொற்கள் தன் காதில் செம்புருக்கினை வெய்தாய் ஊற்றினாற் போன்று சுட்டது என்க.

 (294)

 

அச்சுவகண்டன் சண்டவேகையை ஏவி உலகை
அழிக்கத் தொடங்கல்

1425. ஆங்கவர் மொழிந்த போழ்தி
     னருவரை கரிய தொப்பான்
ஈங்கிவர் மாற்ற 1நன்றீண்
     டிருந்தினி யென்னை யென்னா
வாங்குநீ ருலகில் வாழு
     முயிர்களை வாரிக் கொண்டு
தூங்குநீர்க் கடலுட் பெய்யும்
     விஞ்சையை விடுக்க2 நேர்ந்தான்.
 
     (இ - ள்.) ஆங்கு - அவ்வாறு, அவர் மொழிந்த போழ்தின் - அத்தூதர்கள்
கூறியவுடனே, கரியது அருவரை ஒப்பான் - கருமை நிறமுடைய கடத்தற்கரிய மலையை
ஒத்த அச்சுவகண்டன், ஈங்கு இவர் மாற்றம் நன்று - இவ்விடத்தே இத்தூதர்கள் மொழி
மிக நன்றாயிருந்தது, ஈண்டு இருந்து இனி என்னை - இவ்விடத்தே இன்னும் இருப்பதனால்
யாதுபயன், என்னா - என்று கூறி, வாங்குநீர் உலகில் வாழும் உயிர்களை - வளைந்த
கடலாலே சூழப்பட்ட உலகிலே வாழுகின்ற உயிர்கள் அனைத்தையும், வாரிக்கொண்டு
- அள்ளிக்கொண்டு சென்று, வீங்கு நீர்க்கடலுள் பெய்யும் - பெருகிய நீரையுடைய
கடலின்கண்ணே பெய்தற்குரிய, விஞ்சையை - மாயவித்தையை, விடுக்க நேர்ந்தான் -
ஏவுதற்கு இயைந்தனன், (எ - று.)

     அக் கொடிய செய்தியைக் கேட்ட அச்சுவகண்டன் இவ்வுலகத்தில் வாழும்
எல்லாவுயிரையும் இப்பொழுதே கடலிலே வாரிப் போகட்டு விடுவேன் என்று எண்ணி
அவ்வாறு செய்தற்குரிய மந்திரத்தைச் சிந்தித்தான் என்க.

     விஞ்சை - சண்டவேகை என்னும் மாயத் தெய்வத்தை ஏவும் மறை மொழி.

(295)

 

சண்டவேகைக்கு அச்சுவகண்டன் பணித்தல்

1426 ஓர்ந்தவன் மனத்து விஞ்சை
     யொருபுடை யெய்த லோடும்
சார்ந்தது சண்ட வேகை
     பணிபணி யென்று சார
 

     (பாடம்) 1மாயி னிருந்தினி. 3 லுற்றான்.