பக்கம் : 888 | | | வார்ந்தநீ ருலகின் வாழு மனிதரை வல்லை 1யேகித் தேர்ந்துகொண் டொருவ ரின்றித் 2தெய்வமே செகுத்தி டென்றான். | (இ - ள்.) அவன் - அவ்வச்சுவகண்டன், மனத்து - தன் மனத்தினூடே, விஞ்சை ஓர்ந்து - அவ்வித்தையைத் தெளிந்து தியானித்து, ஒருபுடை எய்தலோடும் - ஒருபுறத்தே சார்ந்தவுடனே, சண்டவேகை சார்ந்தது - அவ்வித்தைக்குரிய சண்ட வேகை என்னும் பேய் ஒன்று அச்சுவகண்டன்பால் எய்திற்று, பணி பணி என்று சார - எனக்குரிய செயலைக் கூறுக என்று வேண்டி அச்சண்டவேகை தன்னை எய்த, வார்ந்த நீர்உலகின் - நெடிய கடலாற் சூழப்பட்ட இம்மண்ணுலகத்தே, வாழும் மனிதரை வாழாநின்ற மானிடரை எல்லாம், நீவல்லை ஏகி - நீ விரைந்து சென்று, ஒருவர் இன்றித் தேர்ந்துகொண்டு - ஒரு மனிதனேனும் எஞ்சாமையைத் தெளிந்துகொண்டு, தெய்வமே - தெய்வமாகிய சண்டவேகாய், செகுத்திடு என்றான் - கொன்றொழிப்பாயாக என்று பணித்தான், (எ - று.) தெய்வம் : விளி. பணி பணி - பணியைப் பணி - என இரண்டாவது விரிக்க. தெய்வம் - பணித்திடு ! பணித்திடு ! என்று விரைந்து வர; எனினும் ஆம். அடுக்கு விரைவுப் பொருளது. மனத்தே மாய மந்திரத்தைத் தியானித்தவுடன் சண்டவேகை பணி பணி என்று சார, நீ தேர்ந்துகொண்டு மனிதரை ஒருவரின்றிக் கொன்றிடு என்றான் என்க. | (296) | | சண்டவேகை கூற்றுவனுக்குக் கூறல் | 1427. | கொடியவன் விடுத்த போழ்திற் கூற்றுவன் றன்னைக் கூவி வடியெயி றிலங்க நக்கு வாழிய தோள்க 3ளின்று விடுகதி ராழி வெய்யோன் வேண்டவென் வாயுட் பட்டு 4முடியுமிவ் வுலக நீயு முறைத்தொழின் முடித்தி யென்ன. | (இ - ள்.) கொடியவன் - கொடுங்குணமுடைய அச்சுவகண்டன், விடுத்த போழ்தில் - இவ்வாறு சண்டவேகையை ஏவிவிட்டவுடனே, கூற்றுவன் தன்னைக்கூவி - அச்சண்டவேகை மறலியை அழைத்து, வாழிய தோள்கள் - ஏ கூ.ற்றுவனே உன் தோள்கள் வாழ்க என்று வாழ்த்தி, வடி எயிறு இலங்க நக்கு - கூரிய பற்கள் ஒளிரும்படி சிரித்து, இன்று - இற்றைக்கு, விடுகதிர் ஆழி வெய்யோன் - வீசுகின்ற ஒளியையுடைய | |
| (பாடம்) 1யாகில். 2தெய்வநீ. 3னின்று. 4முடியுவேயு. | | |
|
|