பக்கம் : 889 | | உருட்படையை உவக்கும் அச்சுவகண்டன், வேண்ட - வேண்டிக் கொண்டபடி, இவ்வுலகம் - இம்மண்ணில்வாழ் மாந்தர் கூட்டம், என் வாயுட்பட்டு முடியும் - என்னுடைய வாயுட் புகுந்து எனக்கு இரையாகி மாண்டொழிவதாம், நீயும் - ஆதலாலே நீயும், முறைத்தொழில் முடித்தி என்ன - நீ செய்யும் முறைமைத்தாகிய உயிர் கவர் தொழிலை நன்கு செய்து முடிக்கக் கடவாய் என்று கூறினாள், (எ - று.) என்று, தானைமேல் மடுத்தது என அடுத்த செய்யுளிற் சென்று முடியும். உலகில் வாழும் எல்லா மனிதரையும் முடிக்கக் கருதுதல் கொடுமையே என்பார் கொடியவன் என்றார். சண்டவேகை கூற்றுவனைக் கூய் உலகம் என் வாயுட்பட்டு இன்றே முடியும் நீயும் உன் தொழில் முடித்தி என்ன, என்க. | (297) | | சண்டவேகையின் செயல் | 1428. | அணங்குகள் குழுமி யாமும் பெருவயி றார்து மென்று துணங்கைகோத் தாடி நக்குச் சுடரிலைச் சூல மேந்தி வணங்குபு சூழ மற்ற மாபெருந் தெய்வம் வந்து மணங்கமழ் சுரமை நாடன் றானைமேன் 3மடுத்த தம்மா. | (இ - ள்.) அணங்குகள் - அச்சண்டவேகையைச் சார்ந்த பேய்க்கணங்களும், குழுமி - ஒன்றுகூடி, யாமும் - யாங்களும் பெருவயிறு ஆர்தும் என்று - நம் பெரிய வயிறு நிறைய இன்று உண்ணக்கடவேம் என்று மகிழ்ந்து, கோத்து துணங்கை ஆடி நக்கு - கைகோத்துத் துணங்கைக்கூத்தினை யாடிப் பெருகச் சிரித்து, சுடர்இலைச் சூலம் ஏந்தி - ஒளிருகின்ற இலையினையுடைய சூலப்படையை ஏந்தியவாய், வணங்குபு - சண்டவேகையைத் தொழுது, சூழ - புறஞ்சூழ்ந்துவர, மற்ற மாபெருந் தெய்வம் - அந்தத் தலைமையுடைய பெரும்பேயாகிய சண்டவேகை, வந்து - விரைந்து வந்து, மணங்கமழ் சுரமைநாடன் தானைமேல் - நறுமணங்கமழும் பொழில்மிக்க சுரமை நாட்டு மன்னனாகிய திவிட்டனுடைய படையின்மேல், மடுத்தது அம்மா - தாக்கிற்று. அம்மா : அசை, (எ - று.) “பழுப்புடை யிருகை முடக்கி அடிக்கத் துடக்கிய நடையது துணங்கை யாகும்“. - (திருமுருகாற் - 56 உரை) கூளிகள், யாமும் பெருவயிறு ஆர்தும் என்று, கோத்தாடி நக்கு, ஏந்திச் சூழ, மற்ற மாபெருந்தெய்வம் வந்து நாடன் தானைமேல் மடுத்ததென்க. | (298) |
| (பாடம்) 1மடுத்திட்டானே. | | |
|
|