பக்கம் : 890 | | கூளிகளின் தன்மை | 1429. | பட்டடி நெடிய வீங்கு பரட்டின நொடிக்குங் கால ஒட்டிய வயிற்ற வற்ற லுகிரிடை மயிர முன்கை கட்டிய கண்ணி பீலித் தலையின கழற்காய் போல வட்டமா யுருளுங் கண்ண கணங்கள்வந் திரைத்த வன்றே. | (இ - ள்.) பட்டு அடி - பூமியிலே படும் உள்ளடி, நெடிய - நீளியவாயவும், வீங்குபரட்டின - பருத்த பரடுகளையுடையனவும், நொடிக்கும் கால - நுடங்குகின்ற கால்களையுடையனவும், ஒட்டிய வயிற்ற - முதுகோடொட்டிய வயிற்றை உடையனவும், வற்றல் - வற்றிய உடலுடையனவும், உகிரிடை மயிர முன்கை - நகங்களிடத்தே மயிர்செறிந்த முன் கைகளையுடையனவும், கட்டிய கண்ணி பீலித் தலையின - கட்டப்பட்ட முடிக்கண்ணியையும் மயிற்பீலியையும் சூட்டிய தலையுடையனவும், கழற்காய்போல வட்டமாய் உருளும் கண்ண - கழற்சிக் காயைப்போன்று வட்டவடிவினவாய் உருளாநின்ற விழிகளை உடையனவும் ஆகிய, கணங்கள் வந்து இரைத்த அன்றே - பேய்க்கணங்களும் அப்போர்க்களத்தே வந்து முழங்கின, அன்றே : அசை, (எ - று.) பட்டஅடி - பட்டடி என நின்றது. அடி நெடியவும் பரட்டினவும் காலவும் வயிற்றவும் மயிரையுடைய முன்கையவும் தலையினவும் கண்ணவுமாகிய கணம் வந்திரைத்தன என்க. | (299) | | சண்டவேகையின் மாயப் போர் | 1430. | வரைகளை யுருள வுந்தி 1வந்ததோர் சண்ட வாயு நிரைகிளர் சுடர தாகி நிமிர்ந்ததோ ருருவச் செந்தீ திரைகளை மறிய வீசிச் சிறந்ததோ ரழுவ முந்நீர் விரைகிள ருருவத் தெய்வ2ம் விளைத்தவா றிதுவா மன்றே. | (இ - ள்.) வரைகளை உருள உந்தி - மலைகள் உருளும்படி தாக்கி, வந்தது ஓர் சண்டவாயு - வீசியது ஒரு சூறைக்காற்று, நிரைகிளர் சுடரதாகி - ஒழுங்குபட்டுயர்கின்ற பிழம்பையுடையதாய், நிமிர்ந்தது ஓர் உருவச்செந்தீ - உயர்ந்தெரிந்தது ஒரு நிறமுடைய செந்நெருப்பு, திரைகளை மறிய வீசி - அலைகள் புரளும்படி எறிந்து, சிறந்தது ஓர் அழுவமுந்நீர் - பெருகிற்று ஒரு ஆழியகடல், விரைகிளர் உருவத் தெய்வம் - மணம்மிக்க உருவத்தை உடைய சண்டவேகை, விளைத்தவாறு இது - அப்போர்க்களத்தே தோற்றுவித்த தன்மை, இத்தன்மைத்து, ஆம் - ஆகும், அன்றே : அசை, (எ - று.) | |
| (பாடம்) 1வருமொரு. 2மிது படைவிடுத்தவாறே. | | |
|
|