பக்கம் : 891 | | மலைகளை உருட்டி வந்தது ஒருசூறைக் காற்று, நிரைகிளர் சுடரதாகி நிமிர்ந்தது ஒரு செந்தீ, திரைகளை மறியவீசிப் பெருகிற்று ஒரு கடல். இச்செயல் எல்லாம் சண்டவேகை செய்த மாயப் போரென்க. | (300) | | இதுவுமது | 1431. | வரைகளு மரனு மண்ணு மறித்திடும் வாயு செந்தீப் புரைகிளர் பொடிக ளாரப் 1புணர்த்திடும் 2புணர்த்த போழ்தில் திரைகிளர் பரவை முந்நீர் திரைத்துக்கொண் டொழுகு மிஃதால் உரைகிள ருலகைத் தெய்வ முண்ணிய வுடன்ற வாறே. | (இ - ள்.) வரைகளும் மரனும் மண்ணும் மறித்திடும் வாயு - மலைகளையும் மரங்களையு மண்ணையும் சூறைக்காற்றுப் புரட்டித்தள்ளா நிற்கும், செந்தீ - அந்நெருப்பு, புரைகிளர் பொடிகள் ஆரப்புணர்த்திடும் - நுண்ணிய துளைகளிலும் செல்லுதற்குரிய நுண்டுகட்சாம்பராய்ச் சுட்டெரித்துச் சேர்த்திடும், புணர்த்த போழ்தில் - அங்ஙனம் சாம்பராய்ச் சேர்த்தவுடன், திரைகிளர் பரவை முந்நீர் - அலையெறியும் அகன்ற கடல், திரைத்துக்கொண்டு ஒழுகும் - அச்சாம்பர்க் குவியலை அள்ளிக் கொண்டு ஓடாநிற்கும், இஃதால் - இத்தன்மைத்து, உரைகிளர் உலகை - பேசுதற்குரிய மானிடர் உலகத்தை, தெய்வம் உண்ணிய - அச்சண்டவேகை விழுங்கும் பொருட்டு, உடன்ற ஆறு - முயன்ற வழி, (எ - று.) மலைகளையும், மரங்களையும் மண்ணையும் அச் சூறைக் காற்றுப் புரட்டித் தள்ளும், இவையிற்றை அச் செந்தீ சாம்பராய் எரிக்கும், அச்சாம்பரை அள்ளிக் கொண்டு அக்கடல் ஒழுகும். இவ்வாற்றான் அச் சண்டவேகை உலகினை உண்ணலாயிற்று, என்க. | (301) | | இதுவுமது | 1432. | மருங்கவை புணர்த்த பின்னை வானக வளாக மெல்லாம் கருங்கலொன் றகன்ற மேலாற் கவித்தது கவித்த லோடும் இருங்கலி யுலக மெல்லா மிருள்கொள வெருவி நோக்கிப் பொருங்கலி யரசர் தானை போக்கிட மற்ற தன்றே. |
| (பாடம்) 1புணர்ந்திடும். 2புணர்ந்த. | | |
|
|