இஃதென்னென்று திவிட்டன் அருக்ககீர்த்தியை வினாதலும் அவன் விடை கூறுதலும் |
1434. | அன்னண முடைந்த போழ்தி னருக்கனை முகத்து நோக்கி என்னிது விளைந்த வாறென் றிருங்கடல் வண்ணன் கேட்பக் கன்னவில் வயிரத் தோளாய் காய்ந்தவன் 1விடுக்கப் பண்டு மன்னுயி ருண்ணுஞ் சண்ட வேகை2யாம் வருவ தென்றான். |
(இ - ள்.) அன்னணம் உடைந்த போழ்தில் - அவ்வாறு தன் படை புறமிட்டு ஓடியபொழுது, இருங்கடல் வண்ணன் - பெரிய கடல் போன்ற நீலநிறமுடைய திவிட்டன், அருக்கனை முகத்து நோக்கி - அருக்ககீர்த்தியின் முகத்தைப்பார்த்து, இது விளைந்தவாறு என் என்று கேட்ப - இவ்வாறு நேர்ந்ததற்குக் காரணம் யாது என்று வினவ, கன்னவில் வயிரத்தோளாய் - மலையை ஒத்த திண்ணிய தோளையுடையோனே, காய்ந்தவன் - நம்பாற் சினங்கொண்டவனாகிய அச்சுவகண்டன், விடுக்க - ஏவி விட்டதனாலே, ஈண்டு - இப்போர்க்களத்தே, மன்னுயிருண்ணும் - நிலைபெற்ற உயிர்களை வாயிலிட்டு உண்ணுகின்ற, சண்ட வேகை ஆம் - சண்டவேகை என்னும் தெய்வம் ஆகும், வருவதென்றான் - இச்செயலைச் செய்துவருவது என்று அருக்ககீர்த்தி உரைத்தான், (எ - று.) தன் படை புறங்கொடுத்து ஒடுதலைக்கண்ட திவிட்டன் அருக்க கீர்த்தியை நோக்கி இந்நிகழ்ச்சிக்குக் காரணம் என்னை என வினவ அருக்ககீர்த்தி அச்சுவகண்டன் விடுத்த சண்டவேகை இவ்வாறு செய்து வருவதாயிற்று என்றான் என்க. |
(304) |
|
திவிட்டன் அருக்ககீர்த்தியை நகுதல் |
1435. | 3செற்றலன் விடுத்த பின்றைச் செகுத்துயிர் பருகினல்லான் மற்றிது மறித லில்லை மறிப்பவர் பிறரு மில்லை இற்றித னிலைமை யென்ன விருங்கடல் வண்ண னக்காங் கற்றமி லலங்கல் வேலோ யஞ்சினை போறி யென்றான். |
(இ - ள்.) மற்றிது - இச்சண்டவேகை என்னும் தெய்வம், செற்றலன் விடுத்த பின்றை - நம் பகைவனாகிய அச்சுவகண்டன் ஏவிவிட்ட பின்னர், செகுத்து உயிர் பருகின் அல்லால் மறிதலில்லை - பகைவர்களைக் கொன்று அவர் உயிர்குடித்து மீள்வதன்றி வாளா மீள்வதின்றாம், பிறரும் - வேறு யாரும், மறிப்பவர் இல்லை - அதனைத் தடுக்கும் ஆற்றலுடையோரும் |
|
(பாடம்) 1விடுக்கப்பட்டு. 2யிவ். 3செற்றவன |