பக்கம் : 894
 

     இவ்வுலகில் இலர், இதன் நிலைமை இற்று - இத்தெய்வத்தின் இயல்பு இத்தன்மைத்து,
என்ன - என்று அருக்ககீர்த்தி இயம்ப, இருங்கடல் வண்ணன் நக்கு - திவிட்டன் சிரித்து,
ஆங்கு - அவ்வண்ணம், அற்றம் இல் அலங்கல் வேலோய் - சோர்வு இல்லாத வெற்றி
மாலையை உடைய வேற்படையோனே, அஞ்சினை போல்தி என்றான் - நீ மிக
அஞ்சிவிட்டாய் போலும் என்று இயம்பினான், (எ - று.)

     மேலும், அருக்ககீர்த்தி, “இச் சண்டவேகை அச்சுவகண்டன் கருதியபடி உயிர்களைப்
பருகி ஒழிவதன்றி, வாளா மீளாது ; அதைத் தடுக்கும் ஆற்றலுடையோரும் இலர்,
என்றானாக, நம்பி அவனை நகைத்து நீ பெரிதும் அஞ்சினை போலும் என்றான் என்க.

(305)

 

திவிட்டன் பேருருக் கோடல்

1436. பேயெரி யுமிழ்ந்து நம்மேல்
     வருமெனப் பேசு கின்றாய்
நீபெரி தினியை யென்னா
     நெடியவ 1னதனை நோக்கிக்
காயெரி சுடர்விட் டாங்குக்
     கனன்றனன் கனல லோடு
மாயிரு விசும்பு மஞ்சும்
     வடிவினன் வள்ள லானான்.
 
     இ - ள்.) பேய் எரி உமிழ்ந்து நம்மேல் வரும் எனப் பேசுகின்றாய் - ஓர் எளிய
பேய் தீக்கான்று நம் மேலே போர் செய்யவரும் என்று கூறாநின்றாய், நீ பெரிது இனியை -
நீ பெரிதும் இனிய மொழியை உடையாய், என்னா - என்று கூறி, நெடியவன் - திவிட்டன்,
அதனை நோக்கி - அச்சண்ட வேகையின் மாயச் செயலைப்பார்த்து, காய் எரி சுடர்
விட்டாங்கு - சுடுகின்ற ஊழித் தீ சுடர்களைக் கக்கினாற்போன்று, கனன்றனன் -
சினந்தான், கனலலோடும் - அவ்வாறு சினங்கொண்டவுடனே, வள்ளல் - திவிட்டன், மா
இரு விசும்பும் அஞ்சும் வடிவினன் ஆனான் - மிகப் பெரிய விசும்பும் இவன் உருவத்திற்கு
யாம் இடமுடையேம் அல்லம் என அஞ்சுதற்குக் காரணமான பேருருவத்தை எய்தினவன்
ஆயினன், (எ - று.)

     எளியபேய் தீக்கான்று நம்மேல் போர் செய்யவரும் என்றனை உன் மொழி
இனிதாயிருந்தது என்று கூறித் திவிட்டன் அப் பேயினைப் பார்த்து வெகுண்டானாக;
வெகுளுதலோடே விசும்பும் அஞ்சும் பேருருவம் எய்தி நின்றான் என்க.

(306)

 

திவிட்டன்பால் வலம்புரியும் வில்லும் வந்தெய்துதல்

1437. நலம்புரி செய்கை மேனாட்
     பெற்றநற் றோழ னேபோல்
உலம்புரி யுருவத் தோளாற்
     குற்றபோழ் துதவ லுற்று
 
 

     (பாடம்) 1 ன்றன்னை.