பக்கம் : 895 | | | வலம்புரி வலத்த தாக விடத்ததோர் வயிர வல்விற் கலம்புரி கனபொற் பூணான் கைவந்து புகுந்த 1தன்றே. | (இ - ள்.) நலம்புரி செய்கை - நன்மையை விரும்பி நற் செயலும் உடைமையாலே, மேனாட் பெற்ற - முந்தை நாளிலே நட்ட, நற்றோழனேபோல் - நல்ல பண்பமைந்த நண்பனைப் போன்று, உலம்புரி உருவத்தோளாற்கு - திரள்கல்லை ஒத்த அழகிய தோள்களையுடைய அத்திவிட்ட நம்பிக்கு, உற்றபோது உதவலுற்று - இடுக்கண் உற்ற காலத்திலே உதவி செய்தலைப் பொருந்தி, வலம்புரி இடத்ததாக - அவனது வலக் கையிலே வலம்புரிச் சங்கம் வந்து பொருந்த, இடத்ததுகை - இடக்கையிலே, ஓர் வயிர வல்வில் - ஒரு வயிரம் போன்ற வலிய வில், கலம்புரி கனபொற்பூணான் - அணிகலனாகப் புனையப்பட்ட கனவிய பொன்னாலாகிய பூண்களையுடைய அத்திவிட்ட நம்பியின் பால், வந்து புகுந்ததன்றே - வந்து பொருந்திற்று, அன்றே : அசை, (எ - று.) திவிட்டன் பேருருக் கொண்டவுடன் உற்றுழி உதவும் நல்ல நண்பனைப் போன்று வலம்புரிச் சங்கும் வயிரவில்லும் தாமே வந்து பொருந்தின என்க. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்பவாகலின் தக்க சமயத்தில் உதவியாக வந்த அவ் வருங்கலங்களை நற்றோழனே போல் என்று உவமை கூறினார். | (307) | | திவிட்டனின் தோற்றம் | 1438. | நெதிசொரி சங்க மேந்தி நெடுஞ்சிலை யிடங்கைக் கொண்டு விதிதரு நீல மேனி விரிந்தொளி துளும்ப நின்றான். மதியொரு பால தாக வானவின் மருங்கு கோலிப் புதியதோர் பருவ மேகம் போந்தெழு கின்ற தொத்தான். | (இ - ள்.) நெதிசொரி சங்கம் ஏந்தி - தன்னை அடைந்தார்க்கு வேண்டியாங்கு நிதிகளைப் பொழிகின்ற வலம்புரிச் சங்கு வலக்கையின் ஏந்தி, இடங்கை - இடக்கையிலே, நெடுஞ்சிலை கொண்டு - நெடிய வல்வில்லை ஏந்திக்கொண்டு, விதிதரு நீல மேனி - ஊழாலே தரப்பட்ட நீலவண்ணமுடைய திருமேனி, விரிந்து ஒளி துளும்ப நின்றான் - நாற்புறத்தும் விரிந்து ஒளி பரவும்படி நின்றவனாகிய திவிட்டன், புதியதோர் பருவமேகம் - புதுமையுடைய முதிர்ந்த முகில் ஒன்று, மதி ஒரு பாலது ஆக | |
| (பாடம்) 1வன்றே. | | |
|
|