பக்கம் : 898
 

     சண்டவேகை இவ்வாறு அஞ்சித் தன் கூளிப் படையோடே வானத்தில் ஏறி
மறைந்தவுடனே அச்சுவகண்டன் கைபுடைத்துக் கண்கள் சிவந்து வாயை மென்று என்
யானையைக் கொண்டு வருக என்றான் என்க,

(311)

 

அச்சுவகண்டனை அஞ்சித் திவிட்டன் படை உடைதல்

1442. மாலுமால் களிறு நுந்தி
     மற்றவன் வருத லோடும்
ஆலுமால் புரவித் திண்டே
     ரரசன தரவத் தானை
1வேலினா னுடங்கு நில்லா
     துடைந்திட வெகுண்டு நோக்கி
நீலமா மணிக்குன் றொப்பா
     னெடுஞ்சிலை யிடங்கைக் கொண்டான்.
     (இ - ள்.) மாலும் மால் களிறு நுந்தி - மதத்தான் மயங்கும் பெரிய
களிற்றியானையைக் கடாவி, மற்றவன் வருதலோடும் - அவ்வச்சுவகண்டன் தன்மேல்
போர்தொடுக்க வந்தவுடனே, ஆலும் மால் புரவித் திண்தேர் அரசனது அரவத்தானை -
கனைக்கின்ற பெரிய குதிரைகள் பூட்டிய திண்ணிய தேரையுடைய திவிட்டனது முழக்கமிக்க
படை, வேலினான் உடங்கு நில்லாது - வேலேந்திய திவிட்டனுடனே கூடி நில்லாது,
உரைந்திட - அஞ்சி ஓடிட, நீலமா மணிக்குன்று ஒப்பான் - பெரிய மரகதமலையினை
ஒப்பவனாகிய திவிட்டமன்னன், வெகுண்டு நோக்கி - சினந்து பார்த்து, இடங்கை - தன்
இடக்கையில், நெடுஞ்சிலை கொண்டான் - தனது நீண்ட வில்லினைப்பற்றினான், (எ - று.)

     அச்சுவகண்டன், உலக நடுங்க நோக்கிக் களிற்றை ஏறிப் போர்க் களத்தே
புக்கவுடன், திவிட்டன் சேனை அஞ்சிப் புறமிட்டோடிற்று; உடனே நம்பி வில்லை
இடக்கையிலே கொண்டான் என்க.
 

(312)

 

திவிட்டன்பால் கருடன் வந்து எய்துதல்

1443. வாய்ந்தநல் வயிரத் துண்டம்
     வளைந்தொளிதுளும்ப வள்ளாற்
சேந்தன சிறுக ணோடு
     திசைமுகஞ் சிறகு தம்மால்
வேய்ந்தென விரித்து வீசி
     விசும்பிடை யிழிந்து வந்து
காய்ந்தெரி கணையி னாற்குக்
     கருடனு முழைய னானான்.
 

     பாடம்) 1 வேலினா னுடங்கி, வேலினால் விளங்கி.