பக்கம் : 902 | | திவிட்டன் அச்சுவகண்டனை நகுதல் | 1448. | என்றலு மதனைக் கேட்டே யிருங்கடல் வண்ண னக்கு நன்றுநன் றுரைத்தி மீட்டு நல்லையே பெரிது மேடா குன்றின்மே லிருந்து நீநின் குழுவினுண் மொழிவ தல்லால் இன்றுவந் தென்மு னின்று மிதுகொலோ கருதிற் றென்றான். | (இ - ள்.) என்றலும் அதனைக் கேட்டே - என்று அச்சுவகண்டன் கூறலும் அம்மொழிகளைக் கேட்டு, இருங்கடல் வண்ணன் திவிட்டன், நக்கு - நகைத்து, நன்று நன்று உரைத்தி - நன்று நீ நன்றே பேசுகின்றனை, மீட்டும் - மீண்டு் நினைக்குமிடத்தும், பெரிதும் ஏடா நல்லையே - அடே அச்சுவகண்டனே, நீ பெரிதும் நல்லையாகவே காணப்படுகின்றனை, குன்றின்மேல் இருந்து - உன் மலையின் உச்சியிலே இருந்து, நின் குழுவினுள் - உன்னை ஒத்த உன் கூட்டத்தாரூடே, மொழிவதல்லால் - இம்மொழிகளைக் கூறி மகிழ்வதொழித்து, இன்று வந்து - உன் இறுதி நாளாகிய இற்றைக்கு வந்து, என் முன்னின்றும் - உன் கூற்றுவனாகிய எனக்கு முன்னே நின்றும், நீ - அறிவில்லாத நீ, இது கொலோ கருதிற்று - இவ்வாறோ கருதியது, என்றான் - என்று கூறினான், (எ - று.) அச்சுவகண்டனே ! உனக்கு இறுதியாகிய இற்றைநாள் நீ இவ்வாறு கருதுதல் உன் பேதைமையே கண்டாய், பேதைமையாலே நீ பேசும் பேச்சு எமக்கு நகையே விளைத்தலின், நீ பெரிதும் நல்லை! என்று நம்பி நகைத்தான் என்க. | (318) | | அச்சுவகண்டன் போர் தொடங்கல் | 1449. | சிறியவ னுரைகள் வந்தென் செவிசுடும் பொறுக்க லாற்றேன் எறிகடல் வளாகந் தன்னு ளிவன்பெய ரொழிப்ப னென்று செறிமணிக் கடகக் கையாற் றிண்சிலை குழைய வாங்கிப் பொறிநுதல் யானை மேலான் சரமழை 1பொழித லானான். | |
| (பாடம்) 1 பொழிவிக்கின்றான். | | |
|
|