பக்கம் : 903 | | கடல்வளாகந்தன்னுள் - அலையெறிகின்ற கடலாலே சூழப்பட்ட இவ்வுலகத்தே, இவன் பெயர் ஒழிப்பனென்று - திவிட்டன் என்னும் இவன் பெயரை அழித்தொழிப்பேன் என்று, செறிமணிக் கடகக் கையால் - மணிகள் செறிந்த கடகம்பூண்டதன் கையாலே, திண்சிலை குழையவாங்கி - திண்ணிய தன் வில் பெரிதும் வளையும்படி வளைத்து, பொறி நுதல் யானை மேலான் - புள்ளிகள் பொருந்திய நெற்றியை உடைய அரசுவாவின்மேல் அமர்ந்துள்ள அச்சுவகண்டன், சரமழை - அம்புமழை, பொழிதலானான் - சொரிந்தான், (எ - று.) திவிட்டநம்பியின் நகைப்பாலே பெரிதும் வெகுண்ட அச்சுவகண்டன் இவனை இப்போதே கொல்வேன் என்று வலிய வில்லை வணக்கிக் கணைமழை பொழிந்தான் என்க. | (319) | | அச்சுவகண்டன் அம்புகளைக் கருடன் சிறகால் வீசித் தடுத்தல் | 1450. | கடுத்தவ னெய்த போழ்திற் 1கருடன்றன் சிறகு தன்னால் புடைத்திட நெரிந்து பொங்கிச் சரங்கள் போய்ப் புரள நோக்கி விடைத்திறல் விடலை தன்மேல் வெம்பிய மனத்த னாகிப் படைத்திற லாளன் றெய்வப் படைத்தொழில் 2பயிற லுற்றான். | (இ - ள்.) கடுத்து அவன் எய்த போழ்தில் - விரைந்து அச் சுவகண்டன் அம்புகளை ஏவிய பொழுது, கருடன் - கருடப்பறவை, தன் சிறகு தன்னால் - தன்னுடைய வலிய சிறகுகளாலே, புடைத்திட - அவ்வம்புகளை வீசியடித்திட, நெரிந்து - நுறுங்கி, சரங்கள் போய்ப் புரள நோக்கி - அம்புகள் பூமியில் விழுந்து புரண்டமையைப் பார்த்து, விடைத்திறல் விடலை தன் மேல் - காளைபோலும் ஆற்றல் மிக்க திவிட்டன்மேல், வெம்பிய மனத்தன் ஆகி - சினத்தாலே புழுங்கிய மனம் உடையனாய், படைத்திறலாளன் - படைப் பயிற்சியிலே மிக்க ஆற்றலுடைய அச்சுவகண்டன், தெய்வப் படைத்தொழில் பயிறல் உற்றான் - கடவுட்டன்மையுடைய போர்க்கருவியாலாய தொழில்களைஇயற்றத்தொடங்கினான், (எ - று.) அச்சுவகண்டன் பொழிந்த கணைமழையைக் கருடன் தன் சிறகாற் சிதறியவுடன் அவன் கடவுட்டன்மையுடைய படைகளாலே போரிடத் தொடங்கினான் என்க. | (320) | | அச்சுவகண்டன் அரவக்கணை விடுதல் | 1451. | காயிரும் பனைய வெய்யோன் கருமணி வண்ணன் றன்மேல் ஆயிரம் பணத்த தாய வருமணி யாடு நாக |
| (பாடம்) 1 கருடனிற். 2படைக்கலுற்றான், பறைக்கலுற்றான். | | |
|
|