பக்கம் : 904 | | | மாயிரும் புகழி னான்றன் வன்சிலை 1வாங்கி யெய்யச் சேயிருஞ் சுடர்கள் சிந்தித் தீயுமிழ்ந் தோடிற் றன்றே. | மாயிரும் புகழி னான்றன் வன்சிலை 1வாங்கி யெய்யச் சேயிருஞ் சுடர்கள் சிந்தித் தீயுமிழ்ந் தோடிற் றன்றே. (இ - ள்.) காய் இரும்பு அனைய வெய்யோன் - பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்புபோன்ற கொடியவனாகிய அச்சுவகண்டன், கருமணிவண்ணன் தன்மேல் - நீலமணி போன்ற நிறமுடைய திவிட்டன்மேல், ஆயிரம் பணத்ததாய - ஓராயிரம் படங்களையுடையதாகிய, அருமணி ஆடும் நாகம் - பெறற்கரும் மணியையுடைய ஆடுகின்றதொரு பாம்பாகிய அம்பினை, மாயிரும் புகழினான்றன் வன்சிலை - மிக்க புகழையுடைய தனது வலிய வில்லை, வாங்கி எய்ய - வளைத்து எய்ய, சேய் இருஞ்சுடர்கள் சிந்தி - சிவந்த பெரிய ஒளிச்சுடரைச் சிதறி, தீயுமிழ்ந்து ஓடிற்று - தீக்கான்று பாய்ந்தது, அன்று, ஏ : அசைகள், (எ - று.) அச்சுவகண்டன் ஆயிரந் தலையையுடைய அரவக் கணையை நம்பி மேற் றொடுத்தான் அது தீயைச் சிதறிக்கொண்டு நம்பிமேல் வந்ததென்க. | (321) | | திவிட்டன் கருடக்கணையால் அதனைத் துணித்தல் | 1452. | கண்டன னதனை மற்றக் கருங்கடல் வண்ணன் கண்டேவீசித் ஒண்டிற லுவணப் புள்ளி னுருவினோர் தெய்வ வம்பு கொண்டனன் றொடுத்த லோடுங் கொடுஞ்சிறை நுடங்க துண்டமா நாகந் தன்னைத் துண்டத்தாற் றுணித்த தன்றே. | (இ - ள்.) மற்றக் கருங்கடல் வண்ணன் அதனைக் கண்டனன் கண்டே - அந்தத் திவிட்டமன்னனும் அப் பாம்பினைக் கண்டான் கண்டபொழுதே, ஒண்திறல் உவணப்புள்ளின் உருவின் ஓர் தெய்வ அம்பு கொண்டனன் - ஒள்ளிய திறலுடைய கருடப் பறவையின் வடிவிற்றாய ஒரு கடவுட்டன்மையுடைய அம்பினை எடுத்து, தொடுத்தலோடும் - தொடுத்துந்தியவுடன், கொடுஞ்சிறை நுடங்க வீசி - அக்கருடக் கணையும் தன் வளைந்த சிறகுகள் அசையுமாறு வீசி, நாகந்தன்னை - அப்பாம்புக் கணையை, துண்டத்தால் - தனது அலகினாலே, துண்டமா - பல துண்டுகளாம்படி, துணித்தது - துண்டித்தது அன்று, ஏ : அசைகள், (எ - று.) நம்பி, அச்சுவகண்டன் விட்ட அரவக்கணை வருதலை நோக்கி, அதற்கு மாறாகிய கருடக்கணையைத் தொடுத்தான்; அது தன் சிறகுகளை வீசிப் பறந்துபோய் அப்பாம்பினைத் துண்டுகளாய் வீழத்துணித்த தென்க. | (322) |
| (பாடம்) 1 வாய்ப்ப, வளைய. | | |
|
|