பக்கம் : 907
 
  வெயிலிடை விரிந்து விண்பால்
     விளங்கி வீ1ழிருளை நீக்கப்
பயிலுடை யுலகந் தேறிப்
     பட்டது முணர்ந்த தன்றே.
 
     (இ - ள்.) அயில் உடை அனல் செய்வேலோன் - கூரியதாய்த் தீக்காலும்
சினவேலையுடைய திவிட்டன், அதனையும் அறிந்து - அத்துயிலம்பு வருகையையும்
அறிந்துகொண்டு, துயில் விடை செய்யும் அம்பு தொடுத்தனன் - துயில் அகற்றும்
இயல்பிற்றாய துயில்விடை அம்பொன்றை அதற்கெதிரே தொடுத்துவிட்டான்,
தொடுத்தலோடும் - அத்துயில் விடையம்பைத் தொடுத்தவுடனே, வெயில் இடைவிரிந்து
விண்பால் விளங்கி வீழ் இருளைநீக்க - வெயில் ஒளி இடையே விரியப் பெற்று
விண்பகுதியெல்லாம் விளக்க முறும்படி உண்டாகிய பேரிருளை அகற்றியதாக, பயில் உடை
உலகம் தேறி - உறக்கத்தே பயின்ற உலகம் முழுதும் அவ்வுறக்கம் தெளியப்பெற்று,
பட்டதும் உணர்ந்தது - இடையே நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் உணர்ந்து கொண்டது,
அன்று, எ : அசைகள், (எ - று.)

     துயில் விடை அம்பு - உறக்கம் விடுவித் தெழுப்பும் அம்பு.

     உலகம் உறங்குமாறு செய்யும் துயிலம்பின் வருகையை உணர்ந்த நம்பி, அதற்கு
மாறாகத் துயில்விடை அம்பு தொடுத்தான், அஃது உறக்கத்தே வீழ்ந்த உயிர்களின்
துயிலெடுப்பி, உலகை மூடிய இருளையும் அகற்ற எல்லாரும் உணர்வு பெற்றனர் என்க.

 (326)

 

lஅச்சுவகண்டன் ஆழிப்படையை எடுத்தல்

1457. 2சீற்றமொ டிரியுஞ் செல்வத் தெய்வவம் பெய்த வெல்லா
மாற்றினன் மறுப்ப நோக்கி மற்றவன் 3மாற்ற லான்பேர்
ஆற்றலை யறிந்து வெய்ய வாழிகை யேந்தி யின்னும்
ஏற்றனை பொருதி யோவென் றிலங்கெயி றிலங்க நக்கான்.
 
     (இ - ள்.) சீற்றமொடு இரியும் செல்வத் தெய்வ அம்பு எய்த எல்லாம் - சினத்தோடே
ஓடாநின்ற தனக்குச் செல்வமாயமைந்த தெய்வக்கணைகள் தன்னால் எய்யப்பட்டவற்றை
எல்லாம், மாற்றினன் மறுப்ப நோக்கி - திவிட்டன் தன் கணைகளை எய்து மாற்றித்
தடைசெய்தமையைக் கண்டு, மற்றவன் - அவ்வச்சுவகண்டன், மாற்றலான் பேர் ஆற்றலை
அறிந்து - தன் பகைவனாகிய திவிட்டனுடைய பெரிய ஆற்றலுடைமையைத் தன்னுள்ளே
அறிந்தவனாய், வெய்ய ஆழிகையேந்தி, இப்படையான் அன்றி இவன் ஒழியான் எனக்
கருதித் தனது கொடிய சக்கரப்படையைக் கையிலே
 
 

(பாடம்) 1 ழிருளி னீங்கிப். 2சீற்ற மோ டீயுஞ். 3என்னை, செய்தான்.