பக்கம் : 908 | | எடுத்துக்கொண்டு, இன்னும் ஏற்றனை பொருதியோ - இனியும் எனக்கெதிர் நின்று போராற்றவல்லையோ, என்று - என்று கூறி, இலங்கு எயிறு இலங்க நக்கான் - விளங்குகின்ற பற்கள் மிளிரும்படி சிரித்தான், (எ - று.) இவ்வாழியால், இவன் மாளுதல் திண்ணம் என்று கருதி இன்னும் ஏற்றனை பொருதியோ என்று நக்கான் என்க. | (327) | | திவிட்டன் அச்சுவகண்டனை இகழ்தல் | 1458. | தாழியா தெய்யுந் தெய்வப் படைமுத 1லழிந்துஞ் சாலப் பாழியான் மெலிந்தும் பண்டைப் பாவனை பயிற்றி யென்னை ஆழியால் வெருட்ட லுற்றா யலந்தனை பெரிது மென்றான் சூழிமால் யானை வல்ல சுரமைநாட் டிளைய கோவே. | (இ - ள்.) தாழியாது எய்யும் தெய்வப்படை முதல் அழிந்தும் - தாழ்தலின்றி நீ எய்த தெய்வப்படைகள் முழுமுற்றும் என்னால் அழிக்கப்பட்டனவாக, சாலப் பாழியான் மெலிந்தும் - மிகவும் ஆற்றலாலே குறைவுற்றும், பண்டை பாவனை பயிற்றி என்னை - நீ என்னை எதிர்ப்படும் முன்பிருந்தாற் போன்று பொய்யாகவேனும் காட்டிப் பேசுதலாலே பயன் என்னாம், ஆழியால் வெருட்டலுற்றாய் - எஞ்சியுள்ள இவ்வாழிப்படையை எனக்குக் காட்டி என்னை அச்சுறுத்தவும் தொடங்குகின்றாய், அலந்தனை பெரிதும் - வாய்மையாகவே நீ பெரிதும் வருந்திவிட்டாய், என்றான் - என்று கூறினான், (அவன் யாரெனில்) சூழிமால் யானைவல்ல - முகபடாம் அணிந்த யானைப்போரிலே ஆற்றல் மிக்கவனாகிய, சுரமைநாட்டு இளையகோவே - சுரமை நாட்டினை ஆளும் இளைஞனாகிய திவிட்டமன்னன், (எ - று.) இன்னும் ஏற்றனை பொருதியோ என்று நக்க அச்சுவகண்டனை நோக்கி, உன் தெய்வப் படைகள் அழிந்தொழியவும் நீயும் ஆற்றலற்றாய் ஆகவும், பொய்யாக அஞ்சாதவனைப் போன்று பேசி ஆழியையும் காட்டி அச்சுறுத்தாநின்றனை : நின்றென்னை! அந்தோ நீ பெரிதும் வருந்தி விட்டனை என்று நம்பி இரங்கிக் கூறினன் என்க. | (328) | | ஆழிப்படை கான்ற தீயில் திவிட்டன் மறைதல் | 1459. | புனைகதி ரார மார்பன் புகைந்துகை முறுக்கி விட்ட கனைகதிர்த் திகிரி கான்ற 2கனசுடர் வளைக்கப் பட்டு முனைகதிர் கானச் செந்தீ முழங்கிமேன் மூடப் பட்ட வனைகதிர்க் குன்றம் போல மணிவண்ணன் 3மறைத லானான். | |
| (பாடம்) 1லறுத்துச். 2கண. 3மறைந்து போனான். | | |
|
|