பக்கம் : 909
 

     (இ - ள்.) புனைகதிர் ஆரமார்பன் - ஒப்பனை செய்யப்பட்ட ஒளிமிக்க
முத்துவடங்கள் புரளும் மார்பையுடைய அச்சுவகண்டன், புகைந்து - திவிட்டன்
மொழிகளைக் கேட்டு நெஞ்சழன்று, கைமுறுக்கிவிட்ட - தன் கையாலே சுழற்றி விசைத்து
வீசிய, கனை கதிர்த்திகிரி - ஆரவாரமுடைய ஒளிருகின்ற அச்சக்கரப்படை, கான்ற -
கக்கிய, கனசுடர் - கனவிய தீப்பிழம்பாலே, வளைக்கப்பட்டு - சூழ்ந்துகொள்ளப்பட்டு,
முனை கதிர் கானச் செந்தீ - மண்டி எரிகின்ற சுடரையுடைய காட்டுத்தீ முழங்கி மேல்
மூடப்பட்ட - ஆரவாரித்து மேலே மறைக்கப்பட்ட, வனைகதிர்க்குன்றம் போல -
தோன்றுகின்ற ஒளியையுடைய மாணிக்கமலையைப் போன்று, மணிவண்ணன் - திவிட்டன்,
மறைதலானான் - மறைக்கப்பெற்றான், (எ - று.)

     நம்பியின் மொழிகேட்ட அச்சுவகண்டன் சினந்து ஆழியைச் சுழற்றி வீசினான்;
அவ்வாழிப்படை, தீயைக் கக்கி வருதலால் நம்பி காட்டுத் தீயால் மறைக்கப்பட்ட குன்றம்
போன்று அத் தீப் பிழம்பால் மறைக்கப்பட்டான் என்க. (329)

 
 

ஆழிப்படை திவிட்டனை வலம்வந்து
வலப்பக்கத்தே பொருந்துதல்

1460. உலங்கொண்ட வயிரத் தோளாற்
     குற்றதை யுணர மாட்டார்
நிலங்கொண்டு 1மனித ராழ
     2நிரந்தழ 3லுமிழ்ந்து நேமி
புலங்கொண்ட வயிரக் குன்றின்
     புடைவரும் பரிதி போல
வலங்கொண்டு வந்து
     மைந்தன் வலப்புடை நின்ற தன்றே.
 
     (இ - ள்.) உலங்கொண்ட வயிரத்தோளாற்கு திரள்கல்லை ஒத்த திண்ணிய
தோளையுடைய திவிட்டனுக்கு, உற்றதை - நிகழ்ந்ததனை, உணரமாட்டார் -
அறியவியலாதவராய், மனிதர் - திவிட்டனுடைய படைஞர் ஆகிய மாந்தர்கள்,
நிலங்கொண்டு - பூமியிலே விழுந்து, ஆழ - துயரவெள்ளத்தே மூழ்கா நிற்ப, நேமி -
அச்சக்கரப்படை, நிரந்து அழல் உமிழ்ந்து - பரவும்படி தீயைக் கக்கிக்கொண்டு,
புலம்கொண்ட வயிரக்குன்றின் - அறிவினைக் கவர்ந்து கொள்ளும் மாணிக்கமலையை,
புடை வரும் பரிதிபோல - புடைசூழ்ந்துவரும் செஞ்ஞாயிற்று மண்டிலத்தைப் போன்று,
வலங்கொண்டு வந்து - திவிட்டனை வலஞ்சூழவந்து, மைந்தன் வலப்புடை நின்றது
-திவிட்டனுடைய வலப்பாகத்தே பொருந்திற்று, அன்று, ஏ : அசைகள், (எ - று.)

     அவ் வமயத்தே திவிட்டன் படைஞர் திவிட்டனுக்கு யாது நேர்ந்த தென்று
அறியாதவராய்ப் பூமியிலே விழுந்து துன்பத்தே அழுந்தினர்.
 

     (பாடம்) 1மனிச. 2நீரழ. 3லுமிழ.