பக்கம் : 910 | | அவ் வாழிப் படையோ மலையினை வலம் வரும் ஞாயிற்று மண்டிலம் போலே நம்பியை வலம் வந்து அவனுடைய வலக்கையிலே பொருந்திற்றென்க. | (330) | | திவிட்டன் அவ் வாழிப்படையே ஏவி அச்சுவகண்டனையும் யானையையும் அழித்தல் | 1461. | கன்னவில் கடகத் தோளான் கண்டுகை தொழுது கொண்டு மின்னவிர் விளங்கு நேமி 1விடுத்தனன் விடுத்த லோடும் மன்னனை மார்பு 2கீண்டு மணிமுடி யெறிந்து மற்றைப் பொன்னவி ரோடை யானைப் புகர்நுதற் 3புக்க தன்றே. | (இ - ள்.) கல் நவில் கடகத்தோளான் - மலையை ஒத்த கடகஞ்செறித்த தோள்களையுடைய திவிட்டன், கண்டு கை தொழுது கொண்டு - தன் மருங்கு வந்த அவ்வாழியைப் பார்த்துக் கைகூப்பி வணங்கி அதனை வலக்கையின் ஏந்திக்கொண்டு, மின் அவிர் விளங்கும் நேமி - ஒளி பரப்பித் திகழ்கின்ற அவ்வாழிப்படையை, விடுத்தனன் - அவ் வச்சுவகண்டன்மேல் ஏவினான், விடுத்தலோடும் - ஏவியவுடனே, மன்னனை - அச்சுவகண்டனை, மார்புகீண்டு, அவ்வாழி சென்று மார்பினைப் பிளந்து, மணிமுடி எறிந்து - மணிகள் அழுத்தப்பட்ட முடியணிந்த தலையையும் அரிந்து, பொன் அவிர் ஓடையானை புகர்நுதல் புக்கது அன்றே - பொன்னாலியன்ற விளக்கமுடைய முகபடாமணிந்த அச்சுவகண்டன் யானையினது புள்ளிகள் அமைந்த நெற்றியினும் புகுந்தது, அன்று, ஏ : அசைகள், (எ - று.) நம்பி, அவ்வாழியைத் தொழுது அவ்வச்சுவகண்டன்மேலே ஏவினனாக, அவ்வாழி, அச்சுவகண்டன் மார்பினைப் பிளந்து, தலையை அரிந்து, அவன் ஏறிய யானையின் முகத்தினும் புக்க தென்க. | (331) | | அச்சுவகண்டன் யானையினின்றும் வீழ்தல் | 1462. | கழலவன் கனன்று விட்ட கதிர்நகை நேமி போழ மழகளி யானை தன்மேன் மறிந்துவீழ் கின்ற மன்னன் நிழலவிர் விலங்க னெற்றி நிமிர்ந்ததோர் காள மேகம் அழலவன் றிகிரி பாய வற்றுவீழ் கின்ற தொத்தான். | |
| (பாடம்) 1விட்டனன். 2கண்டம் மணிமுடி யோடு வந்து. 3புரண்ட. | | |
|
|