பக்கம் : 916 | | (இ - ள்.) பெருந்தேவி - அச்சுவகண்டன் மனைவியருள் வைத்து முதன் மனைவி யாவாள், வண்டு ஆர் மணிமுடியான் - வண்டுகள் மொய்க்கின்ற அழகிய முடியுடைய தன் கணவனாகிய அச்சுவகண்டனுடைய, மார்பு துணிகிடப்ப - மார்பின் பிளவுகள் கிடப்பவற்றை, கண்டாள் - பார்த்தாள், கை சோர்ந்து - கையறவு கொண்டு, வெண்தாரை நீர்வேல் நெடுங்கண் மூழ்கி - வெள்ளிய தாரையாகிய கண்ணீர்ப் பெருக்காலே வேல் போன்ற தன் நெடிய கண்கள் முழுகியவாய், மேல்பிறழ - மேலே பிறழாநிற்ப, உயிர் விண்டாள் - மூர்ச்சையுற்று வீழ்ந்தாள், பின்னும் - மேலும், வெற்றுடலம் ஆயினாள் - உயிர்போய உடலுடையள் ஆயினாள், (எ - று.) உயிர் - உயிர்ப்பு. உயிர்ப்படங்கி இறந்தாள் என்க. அவ்வாறு வந்த அச்சுவகண்டன் தேவியருள் வைத்து முதல் மனைவியாகிய கோப்பெருந் தேவி அச்சுவகண்டன் உடற்பிளவுகளைக் கண்டு கையற்றுக் கண்ணீரில் மூழ்கி மூர்ச்சையுற்று வீழ்ந்து உயிர் நீத்தாள் என்க. இதனைக் “கணவனொடு முடிந்த படர்ச்சி“ என்று காஞ்சித்திணைக்கண் ஓதுவர் தொல்காப்பியர். | (340) | | இது முதல் 12 செய்யுள்கள் மகளிர்கள் துயரங் கூறுவனவாய் ஒரு தொடர் | 1471. | கோதை சரியக் கொடிமருங்கு லேரழிய மாதர் மடமஞ்ஞை மாநிலத்து வீழ்வனபோல் காதலன் மார்பகலங் கண்டேதங் கண்புடைத்துப் பேதை மடமகளிர் வீழ்ந்தார் பிணையன்னார். | (இ -ள்.) கோதை சரிய - மலர்மாலைகள் அணிந்த கூந்தல் சரிந்து வீழவும், கொடிமருங்குல் ஏர் அழிய - பூங்கொடி போன்ற நுண்ணிடை அழகழியவும், மாதர் மடமஞ்ஞை - அழகிய இளமயில்கள், மாநிலத்து - பூமியின் மேலே, வீழ்வனபோல் - வீழ்ந்தாற்போன்று, காதலன் - தம் கணவனுடைய, மார்பு அகலம் - மார்பை, கண்டே - கண்டு, தம் கண்புடைத்து - தம் கைகளாலே கண்களை மோதியவராய், பேதை மடமகளிர் - பேதையராகிய மடப்பமுடைய மகளிர்களாகிய, பிணை அன்னார் - மான்பிணை போல்வார், வீழ்ந்தார் - பூமியிலே வீழ்ந்தனர். கோதை : ஆகுபெயர். மாதர் - அழகு. காதலன் - அச்சுவகண்டன் மார்பகலம் : இருபெயரொட்டு. கோதை சரியவும் ஏரழியவும் மஞ்ஞை வீழ்வனபோல் காதலன் மார்பகலம் கண்டு கண்புடைத்து பிணையன்னாராகிய மடமகளிர் வீழ்ந்தார் என்க. | (341) | | 1472. | வாங்கு கொடிமுறுக்கி மாநிலத்து விட்டனபோல் தாங்கார் புரண்டு தலைதடுமா றாய்க்கிடந்தங் |
| | | |
|
|