பக்கம் : 917 | | | கேங்கினா ரெத்துணையோர் போழ்துங் கழிந்தெழுந்து நீங்காத வாருயிரார் நீரா யுருகினார். | (இ - ள்.) வாங்கு கொடிமுறுக்கி - வளைந்த பூங்கொடிகளை முறுக்கி, மாநிலத்து விட்டனபோல் - பெரிய பூமியிலே போடப்பட்டவற்றை ஒத்து, தாங்கார் - துயரம் பொறாதவராய், தலைதடுமாறாய்க் கிடந்து - ஒருவர்க்கொருவர் தலை தடுமாற்றமாகக் கிடந்து, அங்கு - அப்போர்க்களத்தே, ஏங்கினார் - ஏங்கி அழுது, எத்துணை போழ்தும் - நீண்ட பொழுது, அங்கு அழிந்து - அவ்வாறு துன்பத்தால் அழிந்து பின்னர், எழுந்து நின்று, நீங்காத ஆருயிரார் - ஊழ்வலியுண்மையால் அகன்றிடாது நிலைபெற்ற உயிருடையராய், நீராய் உருகினார் - மன நீராய் விடும்படி, துயரத்தாலே உருகுவாராயினர், (எ - று.) பூங்கொடியினை அறுத்துப் பூமியிலே போகட்டாற் போன்று நீண்ட பொழுது அத் தேவியர் ஏங்கிக் கிடந்து எழுந்து ஊழ்வலியாற் போகாத உயிரையுடையராய் நீரா யுருகினார் என்க. எத்துணையோர் என்புழி ஓர், அசை. | (342) | | வேறு | 1473. | அரைசர் 1கோவே யடலாழி வலவ வார்க்குந் தோலாதாய் புரிசை நகர நூற்றொருப துடையாய் பூமி முழுதாண்டாய் உரைசெய் துலகம் பாராட்டு மொளியா யோடை 2யானைமேல் வரைசெய் தனைய திரடோளாய் மறிதல் பொருளோ வயவேந்தே. | (இ - ள்.) அரைசர் கோவே - வேந்தர்க்கும் வேந்தாயவனே, அடல் ஆழி வலவ - வெற்றிமிக்க ஆழிப்படையில் வல்லுநனே, ஆர்க்குந் தோலாதாய் - எத்திறத்தாரிடத்தும் தோற்றறியாதவனே, புரிசைநகரம் நூற்றொருபது உடையாய் - மதில் சூழ்ந்த பெரிய நகரங்கள் நூற்றுப்பத்துடையோனே, பூமிமுழுது ஆண்டாய் - இவ்வுலகம் முழுதும் ஒரே குடைக்கீழ் ஆண்டோனே, உரைசெய்து உலகம் பாராட்டும் ஒளியாய் -அறிஞர்கள் எடுத்து மொழிந்து பாராட்டுகின்ற புகழை உடையோனே, ஓடை யானைமேல் வரைசெய்தனைய திரள் தோளாய் - முகபடாமணிந்த அரசுவாவின்மேலே அமர்ந்து, செல்லும் மலையைத் திரட்டிச் செய்தாலொத்த தோளையுடையோனே, மறிதல்பொருளோ - எம்மை நீத்து நீ இவ்வாறு மாண்டு போதல் உனக்குத் தகுதியாமோ, வயவேந்தே - வெற்றிமிக்க வேந்தனே, (எ - று.) | |
| (பாடம்) கேறே. 2 யானையாய். | | |
|
|