பக்கம் : 918 | | கோவே ! ஆழிவலவ ! தோலாதாய் ! உடையாய் ! முழுதாண்டாய் ! ஒளியோய் ! தோளாய் ! எம்மைவிட்டு நீ இவ்வாறு மாண்டது பொருளாமோ என்றார் என்க | . (343) | | 1474. | வானு மண்ணு முடனஞ்சும் 1வரையாய் மன்னர் மணிமுடிமேல் தேனும் வண்டும் பலசென்று திளைக்குஞ் செம்பொற் செறிகழலாய் நான மண்ணி யகிறேக்கி நாவி கமழு மெழிலாகம் ஈன மண்ணி லிவர்காணக் கிடத்த லினிதோ 2வியல்வேந்தே. | (இ - ள்.) வானும் மண்ணும் உடன் அஞ்சும் - வானுலகத்தாரும் மண்ணுலகத்தாரும் ஒருங்கே அஞ்சாநின்ற, வரையாய் - மலையுலகத்து மன்னனே, மன்னர் மணி முடிமேல் தேனும் வண்டும் பல சென்று - பகை மன்னர்களின் மணிகளிழைத்த முடியின்மேல் மொய்த்த வண்டுகளும் தேனும் ஆகிய பலவும் வந்து, திளைக்கும் - பொருந்துகின்ற, செம்பொற் செறிகழலாய் - செவ்விய பொன்னாற் செய்துகட்டிய வீரக்கழலுடையோய், நானமண்ணி - நன்னீரினும் பன்னீரினும் குளித்து, அகில் தேக்கி - அகிற்புகை யூட்டப்பெற்று, நாவிகமழும் கத்தூரி மணங்கமழாநின்ற, எழில் ஆகம் - அழகிய உன் திருமேனி, ஈன மண்ணில் - புலால்நாறும் இப்போர்க்களத்தே, இவர் காண - எளிய இம்மானிடர் காணுமாறு, கிடத்தல் இனிதோ - எளிதாய்க் கிடத்தலும் நன்றாமோ, இயல் வேந்தே - இலக்கணமமைந்த வேந்தனே, (எ - று.) வரையாய் ! கழலாய் எழிலாகம் இவர்காண ஈனமண்ணிற் கிடத்தல் இனிதோ என்று புலம்பினர் என்க. | (344) | | 1475. | குழவி நாயிற் றெழிலேய்க்குங் குழம்பார் கோலக் குங்குமமே மெழுகி மீதோர் மணியாரம் வீசிக் கிடந்த விரையாகம் ஒழுகு குதுதிச் சேறாடி யோடை யானை நுதன்மீது வழுவி வீழ்ந்த வகைநாடின் மாயம் போலு மறவேந்தே. |
| (பாடம்) 1 வகையாய். 2 விகல் வேந்தே. | | |
|
|